Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Final: இந்திய அணியில் இஷான் கிஷன்.. ஸ்விங்கான டான்ஸ் ஆடுவாரே.. யோசிச்சுதான் முடிவு எடுத்தாங்களா?

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி இடம்பெற்ற கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகிய நிலையில், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இதற்கான 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது. அந்த அணிக்கு கேப்டனாக கம்மின்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் இரு வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

Ishan Kishan Replaces KL Rahul in the Indian team for WTC Final at England

ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ரஹானே, உனாத்கட், ஷர்துல் தாக்கூர், கேஎல் ராகுல் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். வழக்கம்போல் சுப்மன் கில், விராட் கோலி, புஜாரா, கேஎஸ் பரத், முகமது ஷமி, ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் உள்ளிட்டோர் உள்ளனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போது கேஎல் ராகுல் காயமடைந்தார். இதையடுத்து ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் விலகினார்.

இரண்டாவது விக்கெட் கீப்பர் மற்றும் மாற்று தொடக்க வீரர் என்பதால் கேஎல் ராகுலை பதில் யார் மாற்று வீரராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இதன் மூலம் கேஎஸ் பரத் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் ஸ்விங் மற்றும் ஸ்பின் என்று இரு வகையான பந்துவீச்சிற்கும் இஷான் கிஷன் திணறுவார்.

அதேபோல் அனுபவமில்லாமல் இங்கிலாந்தில் விக்கெட் கீப்பிங் செய்வதும் எளிதல்ல. இதனால் இஷான் கிஷன் இந்திய அணிக்காக களமிறங்க வாய்ப்பு இல்லை என்றே பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியில் யார் காயமடைந்தாலும் ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, May 8, 2023, 19:59 [IST]
Other articles published on May 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+