17 பந்துகளில் அரைசதம்... கொல்கத்தாவில் தெறிக்க விட்ட இஷான்!
Recommended Video

கொல்கத்தா: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரை சதம் எடுத்ததில், மும்பையின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷண் புது சாதனை படைத்தார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் மிகவும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 14 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

கொல்கத்தாவின் சுனில் நரேன், பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 17 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார்.
கொல்கத்தாவுக்கு எதிராக கொல்கத்தாவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் மும்பை முதலில் பேட்டிங் செய்தது. அணியின் ரன் குவிப்பு மெதுவாக இருந்த நிலையில் களமிறங்கினார் இஷான் கிஷண்.
அவர் அதிரடியாக ரன் குவிப்பில் இறங்கினார். 17 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். குல்தீப் யாதவின் ஒரு ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்களை அடித்து தூள் கிளப்பினார்.
21 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து நரேன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்த சீசனில் அதிகவேக அரை சதம் அடித்தோரில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications