Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்கவிட்ட இசான் கிஷன்.. தொடர்ந்து ஹாட்ரிக் அரைசதம்.. சுப்மன் கில் அதிரடி.. இந்தியா ரன் குவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள இந்திய அணியில் இன்றைய ஆட்டத்திலும் ரோகித் ஷர்மாவும் விராட் கோலியும் களமிறங்கவில்லை.

இதனால் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். தொடக்க வீரராக புரமோஷன் வாங்கி சிறப்பாக செயல்பட்டு வரும் இசான் கிஷன், முதல் ஓவரில் இருந்து தன்னுடைய அதிரடி ஆட்டத்தை காண்பித்தார்.

Ishan kishan scores hat trick fifty in west indies odi series

இதேபோன்று சுப்மன் கில்லும் பொறுமையாக விளையாடி இஷான் கிஷனுக்கு நல்ல துணையாக நின்று அணியின் ரன் குவிக்கும் வேகத்தை உயர்த்தினார். மெயர்ஸ் விசிய பந்தில் இஷான் கிஷன் அடித்த பந்தை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தவறவிட்டனர். இதனைப் பயன்படுத்திக்கொண்ட தன்னுடைய அதிரடியை காட்டினார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பவுண்டரியும் சிக்ஸரையும் அடிக்க இசான் கிஷான் தவறவில்லை.

இதன் காரணமாக இந்திய அணி 13.2 வது ஓவரில் எல்லாம் 100 ரன்களை எட்டி விக்கெட் இழப்பின்றி எட்டியது. சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 43 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதே போன்று கில்லும் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். இசான் கிஷன் இன்றைய ஆட்டத்தில் சதம் விளாசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதிரடியாக விளையாடிய இசான் கிஷன் 64 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். சுழற் பந்துவீச்சாளர் யானிச் ஓவரில் இறங்கி வந்து அடிக்க முயன்ற போது இசான் கிஷன் ஸ்டெம்பிட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 143 ரன்களை குவித்தது. இதன் டுத்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வாய்ப்பு ருதுராஜ்க்கு கிடைத்தது. ஆனால் அவர் 14 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 8 ரன்களை சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும்.

Story first published: Tuesday, August 1, 2023, 21:15 [IST]
Other articles published on Aug 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+