Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே மேட்ச்சில் இப்படியா செய்வது!!.. தோனி, ரிஷப் சாதனைகளை ஊதி தள்ளிய இஷான் கிஷன்.. ரசிகர்கள் வியப்பு

லக்னோ: இந்திய கிரிக்கெட்டில் தோனி படைத்த சாதனை வெகு சீக்கிரமாக ஊதித்தள்ளியுள்ளார் இஷான் கிஷான்.

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் முன்னிலை பெற்றது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் இஷான் கிஷான் காட்டிய அதிரடி தான்.

இஷானுக்கு குவியும் பாராட்டு

இஷானுக்கு குவியும் பாராட்டு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷனின் பேட்டிங் விமர்சனங்களை கிளப்பியது. ஆனால் அதற்கெல்லாம் நேற்று பதில் கொடுத்தார். 56 பந்துகளை சந்தித்த அவர், 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்களை விளாசினார். இதற்காக அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சாதனை

சாதனை

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இஷான் கிஷன் பெரும் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். இதற்குமுன் ரிஷப் பண்ட் 65 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். கே.எல். ராகுல் (57), தோனி (56) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள். ஆனால் 89 ரன்கள் அடித்து முதலிடத்தை இஷான் கிஷன் பிடித்துள்ளார்.

 2 அரைசதங்கள்

2 அரைசதங்கள்

இதே போல இஷான் இதுவரை வெறும் 9 போட்டிகளில் விளையாடி, 2 அரைசதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார். முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி டி20 கிரிக்கெட்டில் 2 அரை சதங்களை எடுக்க 85 இன்னிங்ஸ்களில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

IPL 2022: CSK and captain MS Dhoni are in upset, after BCCI makes a bold decision | Oneindia Tamil
தொடர்ந்து வாய்ப்பு

தொடர்ந்து வாய்ப்பு

இஷான் கிஷான் சிறப்பான இன்னிங்ஸை விளையாடி இருப்பதால் இனி வரும் அடுத்த 2 போட்டிகளிலும் அவருக்கு தான் ஓப்பனிங் இடம் இருக்கும் எனத்தெரிகிறது. கடைசி வரை வாய்ப்புகாக காத்திருந்த ருதுராஜ் கெயிக்வாட் காயம் காரணமாக வெளியேறியது ரசிகர்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

Story first published: Friday, February 25, 2022, 15:33 [IST]
Other articles published on Feb 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+