Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'எத்தனை பேர் இருந்தாலும் அங்க நான் தான் ராஜா' - இஷாந்த் கண்ட்ரோலில் இங்கிலாந்து.. செம ரெக்கார்டு

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து மண்ணில், இஷாந்த் ஷர்மா ஒரு சிறப்பான சம்பவத்தை பதிவு செய்திருக்கிறார். தரமான செய்கை என்று கூட சொல்லலாம்.

மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் சாம்பியன் யார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முழுவதும் நடைபெறாத சூழலில், 2வது மற்றும் நேற்றைய 3வது நாள் ஆட்டமும் முழுமையாக நடைபெறவில்லை. 90 ஓவர்கள் முழுமையாக வீசப்படாமல், மோசமான வானிலை காரணமாக முன்பே முடித்துக் கொள்ளப்பட்டது.

டெவோன் கான்வே அரைசதம்

டெவோன் கான்வே அரைசதம்

இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

44வது விக்கெட்

44வது விக்கெட்

இப்போட்டியில், டெவோன் கான்வே விக்கெட்டை கைப்பற்றியது மூலம், இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் எனும் பெருமையை இஷாந்த் பெற்றிருக்கிறார். ஆம்! இதற்கு முன்பு இந்திய முன்னாள் லெஜண்ட் கேப்டன் கபில் தேவ், 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இப்போது, இஷாந்த் ஷர்மா அந்த சாதனையை தகர்த்திருக்கிறார். 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டென்வோ கான்வே விக்கெட்டை காலி செய்திருப்பதன் மூலம், இங்கிலாந்தில் தனது 44வது விக்கெட்டை பதிவு செய்திருக்கிறார்.

ஒரே இன்னிங்ஸில் 7

ஒரே இன்னிங்ஸில் 7

SENA நாடுகளில் அவர் அதிகம் கைப்பற்றிய விக்கெட்டுகள் இங்கிலாந்தில் தான். அதிலும், 2014ல் நடந்த டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணிக்கு வெற்றித் தேடி தந்தவர் இஷாந்த். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை குறிப்பிடும் SENA-வில் அவர் மொத்த கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 113. அதாவது, வெளிநாடுகளில் அவர் கைப்பற்றிய 200 விக்கெட்டுகளில், இந்த மெகா நான்கு நாடுகளில் மட்டும் அவர் பெற்ற விக்கெட்டுகள் 113. அதிலும், குறிப்பாக இப்போது இந்திய அணி களமிறங்கி இருக்கும் இங்கிலாந்தில் அவர் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை வாரிக் குவித்திருக்கிறார்.

மொத்த விக்கெட்ஸ் 304

மொத்த விக்கெட்ஸ் 304

ஒரு ஃபாஸ்ட் பவுலராக டெஸ்ட் போட்டிகளில் 50 மேட்சை கடப்பதே பெரும் போராட்டம். இவர் 100 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இது ஒரு பேட்ஸ்மேன் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு சமம். 100 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இவரது கைகள் சுழன்றிருக்கின்றன என்றால், இவர் நிச்சயம் இந்தியாவின் சொத்து என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. குறிப்பாக, வெளிநாடுகளில் மட்டும் 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் இஷாந்த் கைப்பற்றிய டெஸ்ட் விக்கெட்டுகள் எண்ணிக்கை 304.

Story first published: Monday, June 21, 2021, 21:50 [IST]
Other articles published on Jun 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+