Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

150 டெஸ்ட் போட்டிகள்ல அவர் விளையாடணும்... அத எல்லாரும் பாக்கணும்... மிஸ்ரா எதிர்பார்ப்பு

டெல்லி : கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய பௌலர் இஷாந்த் சர்மா தனது 100வது டெஸ்ட் போட்டியை பூர்த்தி செய்தார்.

14வது ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இஷாந்த் சர்மாவுடன் இணைந்துள்ளார் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா.

இந்நிலையில் இஷாந்த் சர்மா மேலும் பல டெஸ்ட் போட்டிகளை விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது 150வது போட்டியை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Ishant should play at least 150 Test matches, says Amit Mishra

ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளனர் பௌலர் இஷாந்த் சர்மா மற்றும் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 100வது போட்டியை பூர்த்தி செய்துள்ளார் இஷாந்த் சர்மா. மேலும் 303 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு 10 விக்கெட்டுகள் மற்றும் 11 ஐந்து விக்கெட்டுகள் சாதனை அடங்கும்.

இந்நிலையில் இஷாந்த் சர்மா மேலும் பல போட்டிகளில் விளையாடி டெஸ்ட் போட்டிகளில் தனது 150வது போட்டியை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இஷாந்துடன் இணைந்து இந்திய அணிக்காக தான் விளையாடியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள மிஸ்ரா, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தேவை ஏற்பட்டால் பேட்டிங்கிலும் பங்களிப்பை அளிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, April 1, 2021, 16:04 [IST]
Other articles published on Apr 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+