Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நார்த் ஈஸ்ட் ஜெயிக்குமா? பலமான ஏடிகே அணியுடன் மோதல்!

கோவா : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஏடிகே மோகன் பகான் - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி அணிகள் மோதும் லீக் போட்டி நடைபெற உள்ளது.

ஞாயிறு இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி துவங்க உள்ளது. ஏடிகே அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த நான்கு போட்டிகளில் அந்த அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.

ISL 2020-21 : ATK Mohun Bagan vs North East United FC match preview

மும்பை சிட்டி அணி போல ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும், அந்த அணிக்கு அடுத்ததாக இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு வரும் அணி ஏடிகே மோகன் பகான் தான்.

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் எஃப்சி கடந்த சீசனை விட நன்றாக ஆடுகிறது என திருப்தி அடைந்தாலும், இந்த சீசனில் எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப் அட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

எப்போது வேண்டுமானாலும் அந்த அணி ஆறாம் இடத்தை நழுவ விட்டு கீழே செல்லலாம். எனவே, அடுத்தடுத்த போட்டிகளில் அந்த அணி வெற்றி பெறுவது அவசியம்.

நார்த் ஈஸ்ட் இதுவரை பலவீனமான அணிகளுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதுவும் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏடிகே போன்ற பலமான அணியை வீழ்த்தினால், நார்த் ஈஸ்ட் அணி தன்னம்பிக்கை பெற்று அடுத்து வரும் போட்டிகளில் வெற்றிகளை குவிக்கலாம்.

விமர்சகர்களை பொறுத்தவரை இந்தப் போட்டியில் ஏடிகே அணி வெற்றி பெறும் என்றே கூறி வருகின்றனர்.

Story first published: Sunday, January 3, 2021, 18:40 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+