Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதி இடத்தில் ஒடிசா எப்சி... இன்றைய போட்டி கைகொடுக்குமா? எதிர்பார்ப்பில் வீரர்கள்!

படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 64வது போட்டி படோர்டா மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் ஐதராபாத் எப்சி மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதவுள்ளன.

ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கும் ஒடிசா எப்சி அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

64வது போட்டி

64வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 64வது போட்டி கோவாவின் படோர்டா மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்தில் உள்ள ஒடிசா எப்சி அணி, 4வது இடத்தில் உள்ள ஐதராபாத் அணியுடன் மோதவுள்ளது.

முதல் போட்டியில் ஐதராபாத் வெற்றி

முதல் போட்டியில் ஐதராபாத் வெற்றி

இந்த இரு அணிகளும் கடந்த நவம்பர் 23ம் தேதி நடைபெற்ற போட்டியில் ஏற்கனவே மோதிய நிலையில், 1க்கு 0 என்ற கோல் கணக்கில் அந்த போட்டியில் ஐதராபாத் அணி ஒடிசாவை வெற்றி கொண்டது. இந்நிலையில் இந்த தொடரில் இந்த இரு அணிகளும் இரண்டாவது முறையாக இன்றைய தினம் மோதவுள்ளன.

16 புள்ளிகளுடன் ஐதராபாத் 4வது இடம்

16 புள்ளிகளுடன் ஐதராபாத் 4வது இடம்

இந்த தொடரில் இதுவரை தான் விளையாடிய 11 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது ஒடிசா அணி. இந்த அணியின் நிலை இந்த தொடரில் மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில் இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்று 4வது இடத்தில் ஐதராபாத் உள்ளது.

சென்னையின் அணியுடன் ஒடிசா தோல்வி

சென்னையின் அணியுடன் ஒடிசா தோல்வி

இதனிடையே, கடந்த போட்டிகளில் இந்த இரு அணியுமே வெற்றியை பெறவில்லை. சென்னையின் எப்சியுடன் மோதிய கடந்த போட்டியில் ஒடிசா அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதேபோல மும்பை சிட்டி அணியுடன் மோதிய கடந்த போட்டியில் ஐதராபாத் அணி கோல் எதுவும் அடிக்காமல் போட்டியை டிரா செய்துள்ளது.

இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரம்

இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரம்

இந்நிலையில் ஐதராபாத் எப்சி மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதும் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்கான தீவிரத்தில் விளையாடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போட்டி இன்றிரவு படோர்டா மைதானத்தில் 7.30 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது.

Story first published: Tuesday, January 19, 2021, 19:07 [IST]
Other articles published on Jan 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+