Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!

கோவா : 2020 - 21 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி எஃப்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் இடையே ஆன லீக் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனால், இந்தப் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை.

ISL 2020-21 : Mumbai City FC vs Hyderabad FC match result

மும்பை அணி இந்த சீசனில் ஒரு தோல்வி மட்டுமே அடைந்த நிலையில் இந்தப் போட்டியில் பங்கேற்றது. ஹைதராபாத் அணி கடந்த ஒரு போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இந்தப் போட்டியில் ஆடியது.

அதனால், இந்தப் போட்டியில் இரு அணிகளும் சளைக்காமல் ஆடின. இந்தப் போட்டியில் மும்பை சிட்டி அணியின் தாக்குதல் மிகக் கடுமையாக இருந்தது. அதை முன்பே ஊகித்து ஹைதராபாத் அணி தடுப்பாட்ட திட்டத்தை வலுவாக அமைத்திருந்தது.

மும்பை சிட்டி நன்றாக ஆடினாலும் கோல் அடிக்கும் வாய்ப்புகளை மட்டும் கோட்டை விட்டு வந்தது. அதில் போட்டியின் துவக்கத்தில் கிடைத்த ஒரு பெனால்ட்டி வாய்ப்பும் அடங்கும்.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் மும்பை சிட்டி அணி தொடர்ந்து 10 போட்டிகளில் தோல்வி அடையாத அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஹைதராபாத் அணியும் தோல்வியை தவிர்த்து கடந்த இரு போட்டிகளின் வெற்றி தந்த ஊக்கத்துடன் அடுத்த போட்டிக்கு தயாராக உள்ளது.

Story first published: Sunday, January 17, 2021, 11:36 [IST]
Other articles published on Jan 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+