For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா!

கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) தொடரில் இன்று கோவா மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கடைசியில் டிரா ஆனது.

7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 11 அணிகள் மோதும் தொடர் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. ஐ.எஸ்.எல் 2020 கால்பந்து தொடர் இந்த முறை கோவாவில் நடந்து வருகிறது.

ISL 2020: FC Goa match goes draw with North East United FC with 1 goal each

இந்த தொடரின் 12வது ஆட்டம் இன்று கோவாவில் உள்ள பட்ரோடா மைதானத்தில் கோவா மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் எப்.சி அணிகளுக்கு இடையில் விறுவிறுப்பாக நடந்தது.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றிபெற முடியாமல் திணறிய கோவா.. இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று முனைப்புடன் ஆடியது. ஆனால் போட்டியின் தொடக்கத்திலேயே நார்த் ஈஸ்ட் யுனைட்டட் எப்.சி அணியின் இட்ரிஸ்சா சைலா கோல் எடுத்தார்.

இந்த கோலை சமன் செய்ய கடுமையான சிரமப்பட்ட கோவா கடைசியில் பிரேக்கிற்கு முன் 1 கோல் எடுத்து ஆட்டத்தை 1-1 என்று சமன் செய்தது. கோவா அணி சார்பாக இகோர் அங்களோ கோல் எடுத்தார்.

அதன்பின் இரண்டு அணிகளும் ஆட்டம் முடியும் வரை கோல் எடுக்காததால் விறுவிறுப்பாக நடந்த ஆட்டம் கடைசியில் டிரா ஆனது.

Story first published: Monday, November 30, 2020, 22:51 [IST]
Other articles published on Nov 30, 2020
English summary
ISL 2020: FC Goa match goes draw with North East United FC with 1 goal each today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+