For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐஎஸ்எல் 2020: அடுத்தடுத்து 3 கோல்.. ஈஸ்ட் பெங்காலை அடித்து வெளுத்த மும்பை.. பரபரத்த ஆட்டம்!

கோவா: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் 3 கோல்கள் அடித்த மும்பை சிட்டி அணி ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி எளிதாக வெற்றி பெற்றது.

கோவாவில் 7வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 11 அணிகள் மோதும் தொடர் தொடக்கத்தில் இருந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்த தொடரின் 13வது ஆட்டம் இன்று கோவாவில் மும்பை சிட்டி மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகளுக்கு இடையில் விறுவிறுப்பாக நடந்தது.

ISL 2020: Mumbai City wins easily with Three goals against SC East Bengal

இதில் தொடக்கத்தில் பந்தை கட்டுப்படுத்தியது ஈஸ்ட் பெங்கால் அணிதான். ஆனால் ஈஸ்ட் பெங்கால் அணியால் ஒருமுறை கூட கோல் எடுக்க முடியவில்லை. பந்தை சில முறை மட்டுமே மும்பை அணி கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. ஆனால் அப்போதும் கூட மும்பை அணி எளிதாக கோல் அடித்தது.

மும்பை அணியின் ஆடம் லீ பாண்ட்ரே 20 மற்றும் 48வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்தார். அதன்பின் 58வது நிமிடத்தில் மும்பை அணியின் ஹெர்னன் சாண்டானா இன்னொரு கோல் அடிக்க மும்பை அணி மூன்று கோல் எடுத்தது.

இதனால் முழு நேர ஆட்ட முடிவில் 3 கோல்கள் அடித்த மும்பை சிட்டி அணி ஈஸ்ட் பெங்கால் அணியை எளிதாக வெற்றி கொண்டது. ஈஸ்ட் பெங்கால் அணிக்கு இது முதல் ஐஎஸ்எல் தொடர் ஆகும். ஆனால் இந்த தொடரில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து ஈஸ்ட் பெங்கால் அணி திணறி வருகிறது.

முதல் போட்டியில் வென்ற மும்பை இந்த போட்டியில் வெற்றிபெற்று.. தொடரில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளது.

Story first published: Tuesday, December 1, 2020, 22:31 [IST]
Other articles published on Dec 1, 2020
English summary
ISL 2020: Mumbai City wins easily with Three goals against SC East Bengal today.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+