
சர்ச்சை
இந்திய வீரர்களின் இந்த கோரிக்கை பெரிய சர்ச்சையானது. இந்த நிலையில் இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். ஆஸ்திரேலியாவின் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களான ராஸ் பேட்ஸ், டிம் மாண்டார் ஆகியோர் தெரிவித்த கருத்தில், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா வந்தால் ஆஸ்திரேலிய விதிகளை மதிக்க வேண்டும்.

மோசம்
அதுதான் முறை. விதிகளை மதிக்கவில்லை என்றால் அவர்கள் வர கூடாது. கட்டுப்பாட்டு விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அவர்களுக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லை என்றால் கிளம்பி செல்லலாம், என்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்களின் கருத்துக்களை பிசிசிஐ கடுமையாக எதிர்த்து உள்ளது.

எதிர்ப்பு
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி அளித்துள்ள பேட்டியில், ஆஸ்திரேலிய தலைவர்கள் இப்படி பேசி இருக்க கூடாது. இந்திய வீரர்களை மோசமாக சித்தரிக்கும் விதமாக இது உள்ளது. நாங்கள் விதிகளை மதிக்க கூடியவர்கள். ரோஹித் சர்மா 14 நாட்கள் தனிமையில் இருந்ததே இதற்கு சிறந்த உதாரணம். எங்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி உள்ளனர்.

கருத்து
இனரீதியாக கருத்துக்களையும், எங்களை அவமானப்படுத்தும் விதமான கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் ஆஸ்திரேலியாவுடன் தொடரை மேற்கொண்டு தொடர வேண்டுமா என்று யோசனை செய்து வருகிறோம். நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆட வேண்டுமா என்று ஆலோசனை செய்து வருகிறோம்.

வேண்டாம்
நான்காவது டெஸ்ட் போட்டியை நாங்கள் ஆட கூடாது என்று சில மக்கள் பிரதிநிதிகள் நினைத்தால் அதை பின்பற்ற நாங்கள் தயார். ஆம் நான்காவது டெஸ்ட் நடக்கவில்லை என்றால் இழப்பு எங்களுக்கு இல்லை, ஆஸ்திரேலிய ரசிகர்களுக்குத்தான், என்று பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications