Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கொடுக்க நேரம் வந்தாச்சு.. கங்குலி ஆதரவு

Recommended Video

ரோஹித் சர்மாவுக்கு கங்குலி ஆதரவு- வீடியோ

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் கடைசியாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஆடினார் ரோஹித் சர்மா.

அதன் பின் அவர் டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை. அதற்கு ரோஹித் டெஸ்ட் போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை என காரணம் கூறப்படுகிறது.

ஒருநாள் போட்டிகளில் பட்டையைக் கிளப்பி வரும் ரோஹித் சர்மாவுக்கு ஏன் டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பளிக்காமல் இருக்கிறார்கள் என பலரும் கேட்டும் இன்னும் அதற்கு தேர்வாளர்கள் பதில் அளிக்கவில்லை.

இதுதான் சரியான நேரம்

இதுதான் சரியான நேரம்

இந்த நிலையில், முன்னாள் கேப்டன் கங்குலி ரோஹித் சர்மாவுக்கு தன் ஆதரவுக் குரலை அளித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 152 ரன்கள் குவித்த ரோஹித் சர்மாவை டெஸ்ட் போட்டிகளில் சேர்க்க இதுதான் சரியான நேரம் என கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

ஆதரவு அளிக்கும் கங்குலி

ஆதரவு அளிக்கும் கங்குலி

ரோஹித் பற்றி பேசிய கங்குலி, "ரோஹித்துக்கு டெஸ்டில் வாய்ப்பு வழங்க தேர்வாளர்களுக்கு நேரம் வந்துவிட்டது. அவர் தன் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். மனதளவில் சரியான இடத்தில் இருக்கிறார்" என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் ரன் குவிப்பதில்லை

வெளிநாடுகளில் ரன் குவிப்பதில்லை

2013இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ரோஹித் சர்மா, 2016வரை சில போட்டிகள் தவிர்த்து தொடர்ந்து இடம் பெற்று வந்தார். அதன் பின் 2017இல் இரண்டு போட்டிகள், 2018இல் இரண்டு போட்டிகள் மட்டுமே ஆடியுள்ளார். இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவிக்கும் ரோஹித் சர்மா வெளிநாடுகளில் ரன் எடுப்பதில்லை என்பதே அவர் மீது உள்ள குற்றச்சாட்டு. எனினும், அவரது ஒருநாள் போட்டி பார்மை ஏன் தேர்வாளர்கள் கணக்கில் எடுக்க மறுக்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

ரோஹித் நீக்கத்தில் வதந்தி

ரோஹித் நீக்கத்தில் வதந்தி

மேலும், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் தலையீடு காரணமாகவே ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்ற வதந்தியும் உள்ளது. அடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அங்கேயாவது ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படுமா?

Story first published: Thursday, October 25, 2018, 18:22 [IST]
Other articles published on Oct 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+