Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியோட விளையாடறது எப்பவும் சந்தோஷம்தான்... சிஎஸ்கேவுக்கு 500% திருப்பி தரணும்... தஹிர் பளீர்!

டெல்லி : கடந்த 3 ஆண்டுகளாக சிஎஸ்கேவிற்காக முன்னாள் தென்னாப்பிரிக்க லெக் ஸ்பினனர் இம்ரான் தஹிர் விளையாடி வருகிறார்.

கடந்த 2019 ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பௌலர் என்ற சிறப்பை இவர் பெற்றுள்ளார். இதுவரை சிஎஸ்கேவிற்காக 26 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் கேப்டன் எம்எஸ் தோனியுடன் விளையாடுவது எப்போதுமே சந்தோஷத்தை தரக்கூடியது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து விளையாட விருப்பம்

தொடர்ந்து விளையாட விருப்பம்

சிஎஸ்கேவிற்காக கடந்த 2018 முதல் விளையாடி வருகிறார் முன்னாள் தென்னாப்பிரிக்க லெக் -ஸ்பின்னர் இம்ரான் தஹிர். இதுவரை அந்த அணிக்காக 26 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் தொடர்ந்து சிஎஸ்கேவிற்காக விளையாட தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சந்தோஷத்தை தரக்கூடியது

சந்தோஷத்தை தரக்கூடியது

இந்நிலையில் கேப்டன் தோனியின்கீழ் விளையாடுவது எப்போதுமே சந்தோஷத்தை தரக்கூடியது என்று அவர் கூறியுள்ளார். தங்களுடைய தேவைகளை சிஎஸ்கே மிகவும் சிறப்பாக கவனித்துக் கொள்வதாகவும் அணிக்கு திரும்பவும் 500 சதவிகிதத்தை தருவதற்கு ஆவலுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கு மரியாதை

வீரர்களுக்கு மரியாதை

இதனிடையே, சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி அணி வீரர்களுக்கு மிகுந்த மரியாதை அளிப்பதுடன் அவர்களை சிறப்பாக புரிந்துக் கொள்ளக்கூடியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரை அணிவீரர்கள் அனைவரும் மிகவும் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

உலகிலேயே சிறப்பான வீரர்

உலகிலேயே சிறப்பான வீரர்

நம்முடைய தேவைகள் குறித்து நாம் தோனியிடம் எதுவுமே கூற வேண்டியதில்லை. அவரே அதை புரிந்துக் கொண்டு மைதானத்தில் அதை சிறப்பாக அமைத்துத் தருவார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார் தஹிர். நாம் வெறுமனே மைதானத்திற்கு வந்து பௌலிங் செய்தால் மட்டுமே போதும் என்றும் இந்த உலகிலேயே தோனி மிகச்சிறப்பானவர் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Sunday, January 31, 2021, 12:56 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+