Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணியில் மீண்டும் இணையறது மகிழ்ச்சின்னா... ஜெர்சியை போடறது அதைவிட மகிழ்ச்சி... ரெய்னா உற்சாகம்

மும்பை : சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அந்த அணியின் சின்ன தல தெரிவித்துள்ளார்.

நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கேவிற்காக விளையாடி 54 ரன்களை அதிரடியாக குவித்துள்ளார் ரெய்னா.

இந்நிலையில் சிஎஸ்கேவின் இணையதளத்தில் பேசியுள்ள ரெய்னா, அணியில் மீண்டும் இணைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் வெற்றி

நேற்றைய டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. இதையடுத்து மும்பை வான்கடே மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப சிஎஸ்கே தன்னை மாற்றிக் கொள்வதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

ரெய்னா அபாரம்

ரெய்னா அபாரம்

ஆயினும் நேற்றைய போட்டியில் 54 ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார் சின்ன தல சுரேஷ் ரெய்னா. கடந்த இரு ஆண்டுகளாக சையத் முஸ்தாக் அணி கோப்பை தொடரின் சில போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா தனது சிறப்பான ஆட்டத்தை கைவிடாமல் நேற்றைய தினம் விளையாடினார்.

ரெய்னா அதிரடி

ரெய்னா அதிரடி

அவர் மற்றும் சாம் கர்ரன் இருவரும் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடினர். இதையடுத்தே சிஎஸ்கே 188 ரன்களை அடித்தது. அணியின் வீரர்கள் அனைவரிடமும் போட்டியின் வெற்றிக்கான தீவிரம் காணப்பட்டது. ஆயினும் ஒரு சில வீரர்களே சிறப்பாக விளையாடினர். அதில் ரெய்னா முதன்மையானவர்.

அற்புதமானது -ரெய்னா

அற்புதமானது -ரெய்னா

இந்நிலையில், மீண்டும் சிஎஸ்கே மற்றும் தோனியின்கீழ் விளையாடுவது அற்புதமானது என்று ரெய்னா தெரிவித்துள்ளார். சிஎஸ்கே வலைதளத்தில் பேசியுள்ள அவர், அணியின் வீரர்களுக்காக சிறப்பாக செயலாற்றிவரும் சிஎஸ்கேவிற்காக விளையாடுவது எப்போதுமே சிறப்பானது என்று கூறியுள்ளார்.

சிறப்பானது என நெகிழ்ச்சி

சிறப்பானது என நெகிழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்கே மஞ்சள்நிற ஜெர்சியை போட்டுக் கொண்டு விளையாடுவது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய வாழ்நாளில் தான் நினைத்து பெருமைப்படக் கூடிய விஷயம் இந்த ஜெர்சியை அணிந்து சிஎஸ்கேவிற்காக விளையாடுவதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 11, 2021, 20:05 [IST]
Other articles published on Apr 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+