Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வானத்துல பறக்கற மாதிரி இருக்கு... எல்லாத்துக்கும் அவர்தான் காரணம்... ஆர்சிபி கேப்டன் பாராட்டு

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்கு முழு முதல் காரணமாக அந்த அணியின் ஏபி டீ வில்லியர்ஸ் அமைந்துள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் 2021 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இடம் பிடித்துள்ளது மிகச்சிறந்த உணர்வை கொடுத்துள்ளதாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்

ஆர்சிபி அபார வெற்றி

ஆர்சிபி அபார வெற்றி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய நிலையில், ஆர்சிபி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணிதான் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி ஓவரை சிராஜ் கட்டுப்படுத்தியதால் ஆர்சிபிக்கு இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

ஆர்சிபி முதலிடம்

ஆர்சிபி முதலிடம்

இந்நிலையில் இந்த வெற்றியை அடுத்து முதலிடத்தில் இருந்த சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆர்சிபி ஐபிஎல் 2021 தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு தாவியுள்ளது. இதையடுத்து வரும் 30ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதவுள்ளது.

டீவில்லியர்ஸ் சிறப்பு

டீவில்லியர்ஸ் சிறப்பு

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி 75 ரன்களை குவித்த ஏபி டீ வில்லியர்ஸ் குறித்து அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 5 மாதங்களாக அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடாததை குறிப்பிட்டுள்ள விராட் கோலி மேலும் சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

சிறப்பான உணர்வு

சிறப்பான உணர்வு

ஆயினும் அவர் ஐபிஎல்லில் இதுபோன்ற ஆட்டங்களை வெளிப்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இத்தகைய போட்டிகளை அவர் விளையாடி வருவதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார். மேலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது மிகச்சிறப்பான உணர்வை தந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெற்றிக்கு உதவி

வெற்றிக்கு உதவி

நேற்றைய போட்டியில் வெறுமனே 42 பந்துகளில் மட்டும் விளையாடி அவுட்டாகாமல் 75 ரன்களை அடித்துள்ளார் ஏபி டீ வில்லியர்ஸ். விராட் கோலியும் தேவ்தத்தும் சிறப்பான துவக்கத்தை அளிக்காத நிலையில், களமிறங்கிய டீவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தின்மூலம் அணியின் வெற்றிக்கு சிறப்பாக உதவினார்.

Story first published: Wednesday, April 28, 2021, 20:26 [IST]
Other articles published on Apr 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+