உங்களோட குழந்தை உங்களை பார்த்து சிரிக்கறத வார்த்தையால விவரிக்க முடியாது... விராட் நெகிழ்ச்சி

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி வெற்றி கொண்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 மாதங்கள் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட மற்றும் அதிசயமானவை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு ஷாட்டா? அனைவரும் வாய்ப்பிழக்க செய்த அந்த ஒரு சிக்ஸர்.. ரகசியத்தை கூறிய சூர்யகுமார் யாதவ்

மேலும் உங்களுடைய குழந்தை உங்களை பார்த்து சிரிக்கும் அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.

வெற்றிக்கான தீவிரத்துடன் ஆர்சிபி

வெற்றிக்கான தீவிரத்துடன் ஆர்சிபி

ஐபிஎல் 2021 சீசனில் சிறப்பான பேட்ஸ்மேன்கள் மற்றும் தீவிரத்துடன் களமிங்கியுள்ளது விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி. இதற்கு உதாரணம் கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றி கொண்டுள்ளது. தொடர்ந்து வெற்றி கொள்ளும் வகையில் தனது திட்டங்களை செம்மைப்படுத்தியுள்ளது.

பெண் குழந்தை

பெண் குழந்தை

விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு கடந்த ஜனவரி 11ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வமிகா என்று அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த குழந்தையின் வருகைக்கு பிறகு தங்களின் உலகம் வமிகாவை சுற்றியே உள்ளதாக விராட் கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாது

வார்த்தைகளால் விவரிக்க முடியாது

இந்நிலையில் கடந்த 3 மாதங்கள் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட மற்றும் அதிசயமானவை என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆர்சிபி வலைதளத்தில் பேசியுள்ள அவர் உங்களுடைய குழந்தை உங்களை பார்த்து சிரிக்கும்போது அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

வாழ்க்கை மாற்றம்

வாழ்க்கை மாற்றம்

கடந்த 3 மாதங்களில் தங்களுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்வதில் தான் மிகுந்த பொறுப்பான தந்தையாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார். தந்தையாக இருக்கும் சந்தோஷத்தை அனுபவிக்கதான் முடியும் அதை வெளிப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் கோலி.

என்ஜாய் செய்கிறோம்

என்ஜாய் செய்கிறோம்

தாய், தந்தை இருவரும் இணைந்து குழந்தையை பார்த்துக் கொள்வது சிறப்பானது என்றும் அதை தாங்கள் இருவரும் முற்றிலும் என்ஜாய் செய்வதாகவும் விராட் மேலும் கூறியுள்ளார். தங்களின் வாழ்க்கை முற்றிலும் மாறியுள்ளதாகவும் விராட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Both parents taking care of the child together is a different environment -Virat Kohli
Story first published: Wednesday, April 14, 2021, 15:33 [IST]
Other articles published on Apr 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X