Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல பராக்... தோனி அடிச்ச சிகஸ் மழை... பேட்ட பராக் பாடலை ஒலிக்கவிட்ட சிஎஸ்கே... சிறப்பு!

மும்பை : ஐபிஎல் 2021 தொடருக்கான பயிற்சி போட்டியில் சிஎஸ்கே தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் வரும் 10ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது.

இந்நிலையில் பயிற்சி போட்டியின்போது தோனி பொழிந்த சிக்சர் மழையின் வீடியோவை சிஎஸ்கே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.

சொதப்பிய சிஎஸ்கே

சொதப்பிய சிஎஸ்கே

ஐபிஎல் 2020 தொடரின் ப்ளே-ஆப் சுற்றிற்குகூட முன்னேறாமல் வெளியேறியது சிஎஸ்கே அணி. இந்த இழப்பை தற்போது ஈடுகட்டும் விகையில் இந்த ஆண்டு ஐபிஎல்லில் சிறப்பாக விளையாட முனைப்பு காட்டி வருகிறது. தொடர் அறிவிப்புக்கு முன்னதாக பயிற்சி போட்டிகளை அறிவித்து சென்னை மற்றும் மும்பையில் அடுத்தடுத்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

3 நாளில் துவக்கம்

3 நாளில் துவக்கம்

தொடர் துவங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தற்போது மும்பையில் தீவிர வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது சிஎஸ்கே. அணியின் கேப்டன் எம்எஸ் தோனி உள்ளிட்ட வீரர்கள் தொடர்ந்து சிறப்பான வகையில் வலைபயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சிஎஸ்கே தனது வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது.

அதிரடி சிக்ஸ்கள்

அதிரடி சிக்ஸ்கள்

நேற்றைய தினம் வலைபயிற்சியில் ஈடுபட்ட எம்எஸ் தோனி மிகவும் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டார். அவரது அதிரடி சிக்ஸ்களை இந்த பயிற்சியின்போது பார்க்க முடிந்தது. ஐபிஎல் தொடர்களில் இதுவரை 204 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 216 சிக்ஸ்களை அடித்துள்ளார். சிஎஸ்கேவின் கிறிஸ் கெயில் 349 சிக்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

தோனி சிக்ஸ் மழை

இந்நிலையில் தோனியின் அதிரடி வலைபயிற்சி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே வெளியிட்டுள்ளது. தல பராக் என்ற கேப்ஷனுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட பராக் பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டுள்ளது சிஎஸ்கே. மிகவும் அதிரடியாகவும் சிறப்பாகவும் உள்ளது அந்த வீடியோ.

Story first published: Tuesday, April 6, 2021, 16:07 [IST]
Other articles published on Apr 6, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+