எல்லாமே தப்புத் தப்பாப் போச்சு... பந்து வீச்சு ரொம்ப கேவலம்.. டோணி கடுப்பு
ஜோஹன்னஸ்பர்க்: படு மோசமான ஆட்டத்தை நாங்கள் ஆடி விட்டோம். குறிப்பாக பந்து வீசசுதான் மிகவும் மோசம். அதிலிருந்தே மோசமான ஆட்டம் தொடங்கியது என்று கூறியுள்ளார் கேப்டன் டோணி.
தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைக் கண்டது. இந்தியர்களை இப்படி வீழ்த்துவோம் என்று சொல்லி வைத்து அடித்து விட்டார்கள் தென் ஆப்பிரிக்க வீரர்கள்.
இந்த நிலையில் பந்து வீச்சிலிருந்தே தங்களது மோசமான ஆட்டம் தொடங்கி விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார் கேப்டன் டோணி.

மகா மோசமான ஆட்டம்
ஒட்டுமொத்தமாக இது ஒரு மகா மோசமான ஆட்டம் என்று நான் கருதகிறேன். ஆனால் பந்து வீச்சில்தான் எல்லாமே தொடங்கியது. 300 ரன்களை எடுக்க விட்டது தவறு. அதைத் தடுத்திருக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் அதைச் செய்யவில்லை.

ஆரம்பமே அபசகுனம்
எங்களது ஆரம்பமே சரியில்லை. நன்றாக பந்து வீசியிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

அனுபவம் முக்கியம்
இதுபோன்ற நிலைமைகளில் அனுபவம்தான் கை கொடுக்கும். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். மேலும், பெரிய இலக்கைத் துரத்தியதும் எங்களது பேட்மேன்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்து விட்டது.

வேகப் பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்
புதிய பந்தைக் கையாளும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது முக்கியமானது. குறிப்பாக இங்குள்ளது போன்ற பிட்ச்களில் கூடுதல் கவனம் தேவை. கடைசி பத்து ஓவர்களில் நாங்கள் நிறைய ரன்களைக் கொடுத்து விட்டோம். முதல் பத்து ஓவர்களில் நிறைய விக்கெட்களை வீழ்த்தத் தவறி விடடோம்.

சர்மாவுக்கு நல்ல பாடம்
அனுபவம் இல்லாத மோஹித் சர்மாவுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும். புவனவேஸ்வருக்கு நேரம் சரியில்லை என்றுதான் கூற வேண்டும்.

பயிற்சிக்கு நேரமில்லை
எங்களுக்குப் பயிற்சிக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. தொடர் போட்டிகளால் பயிற்சிக்கு நேரமும் இல்லை. கிடைத்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்க வேண்டும். அதுதான் நல்லது. தென் ஆப்பிரிக்காவில் நல்ல வேகப் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். குறிப்பாக ஸ்டெய்ன்.


Click it and Unblock the Notifications