நல்ல வேளை... டாசில் தோத்துட்டோம்... தோனியும் இல்ல.. அதனால போட்டியில ஜெயிச்சுட்டோம்
சென்னை: டாசை இழந்ததால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஜெயிக்க முடிந்தது என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 44வது கிரிக்கெட் போட்டி, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தயங்கினர். இருப்பினும் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, நிதானமாக விளையாடி 67 ரன்களை எடுத்தார்.

வெற்றி இலக்கு
இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள், மும்பை அணியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

38 ரன்கள்
தொடக்க வீரரான முரளி விஜய் அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார். இந்த போட்டியில் கேப்டனாக களமிறங்கிய ரெய்னா, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.

ஏமாற்றிய ரெய்னா
ஆனால் வெறும் 2 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து 17.4 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து தமது மொத்த விக்கெட்டுகளையும் பறி கொடுத்தனர்.

டாசை இழந்தோம்
சென்னை அணியுடனான இந்த வெற்றி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: போட்டியில் டாசை இழந்தது நல்லதாக போய்விட்டது. ஒரு வேளை அதில் வெற்றி பெற்றிருந்தால் நாங்களும் முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்திருப்போம்.

தடுமாறி இருப்போம்
போட்டியில் ஆடுகளமும், இயற்கையும் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இல்லை. 2வதாக நாங்கள் பேட்டிங் செய்திருந்தாலும் நிச்சயம் தடுமாறி இருப்போம். ராகுல் சாஹர் நல்ல வீரர்.

தோனி இல்லை
அணிக்கு தேவையானதை மிக அருமையாக செய்து கொடுக்கிறார். மற்ற வீரர்களும் சிறப்பாகவே செயல்பட்டனர். தோனி இல்லாததும் எங்களுக்கு சாதகம்.

கவலைப்பட மாட்டோம்
தொடரில் நான் ஒரு போட்டியில் கூட அரைசதம் அடிக்கவில்லை என்றாலும் அதை பற்றி கவலைப்படவில்லை. நான் எனது பங்களிப்பை சிறப்பாகவே செய்து வருகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications