
முதல் போட்டி துவக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பு அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்துள்ளது.

சிறப்பான துவக்கம்
அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான துவக்கத்தை தந்து பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களை அடித்து நிலையான ஆட்டத்தை பதிவு செய்தனர். 63 ரன்கள் வரை விக்கெட் விழாத நிலையில் அடுத்தடுத்த ஓவர்களில் ரவி அஸ்வின் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அடுத்தடுத்த விக்கெட்டுகள்
விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய பௌலர்கள் தடுமாறிய நிலையில் அடுத்தடுத்த இந்த விக்கெட்டுகளால் ஆட்டத்தின் போக்கு மாறியுள்ளது. இந்நிலையில் சரியான நேரத்தில் டான் லாரன்சுக்கு எதிராக ஜஸ்பிரீத் பும்ராவை இறக்கி சரியான முடிவை கேப்டன் விராட் கோலி எடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல் விக்கெட்
இந்த போட்டியின் மூலம் சொந்த மண்ணில் தனது அறிமுக போட்டியில் விளையாடிவரும் ஜஸ்பிரீத் பும்ரா, தனது முதல் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் இந்திய அணி திணறிய நிலையில், அஸ்வின் மற்றும் பும்ரா அதிரடியாக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











