Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேப்பாக்கம் ரோடுக்கு சீல் வைப்பு ஒரு ரசிகரும் போக முடியவில்லை.. வெறும் மைதானத்தில் போட்டி நடக்குமா?

சென்னை: சென்னையில் நடக்கும் போராட்டத்தால் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை காணமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடுமையான போக்குவரத்து நெரிசலும், போராட்டமும் நடப்பதால் ரசிகர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

கொல்கத்தா அணிக்கும் சென்னைக்கும் இடையில் இன்று போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் தற்போது காவிரி போராட்டம் நடக்கிறது.

காவிரி பிரச்சனை நடக்கும் போது ஐபிஎல் தேவையா என்று மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இதனால் தற்போது சேப்பாக்கம் மைதானம் பக்கத்தில் பெரிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெரிய அளவில் நடந்தது

பெரிய அளவில் நடந்தது

இந்த போராட்டம் மிகவும் பெரிதாக மாறியுள்ளது. அண்ணா சாலை, மெரினா செல்லும் சாலைகள் எல்லாவற்றிலும் மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். பொதுமக்கள் மட்டுமில்லாமல் திரைபிரபலங்கள் கூட களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். இதனால் சென்னையே ஸ்தம்பித்துள்ளது.

வீரர்கள் சென்றார்களா

வீரர்கள் சென்றார்களா

இந்த நிலையில் வீரர்கள் களத்திற்கு செல்ல முதலில் சில தடைகள் ஏற்பட்டது. பின் சாலைகள் சரிசெய்யப்பட்டு வீரர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். ஆனால் இதற்கும் கூட 6 முதல் 7 வாகனங்கள் வீரர்களின் பேருந்துக்கு பாதுகாப்பு அளித்தது.

வருவார்களா

வருவார்களா

இப்போது அந்த சாலைகள் எல்லாம் தடைப்பட்டு இருக்கிறது. இதனால் ரசிகர்கள் எப்படி மைதானத்திற்கு வருவார்கள் என்று சந்தேகம் எழுந்துள்ளது. மைதானத்திற்கு வருவதற்கு ரயில் பாதையை தவிர வேறு பாதைகள் இப்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே புறக்கணிப்பு

ஏற்கனவே புறக்கணிப்பு

ஏற்கனவே அங்கு சென்னை அணியின் ஆடையில் இருக்கும் ரசிகர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் போலீசும் ரசிகர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டியை காண ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, April 10, 2018, 18:19 [IST]
Other articles published on Apr 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+