
அணி வீரர்களின் பட்டாளம்
ரோகித் சர்மாவுடன் குறிப்பாக ஹர்திக் பாண்டியா,பும்ரா ஆகியோர் களம் கண்டு அணியின் வெற்றிக்கு பாடுபடுவர் என்று கூறலாம். தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சை பற்றி சொல்லவே வேண்டாம். பேட்டிங்கில் டுபிளெசிஸ், வாட்சன், ரெய்னா என பட்டாளமே இருக்கிறது.

எளிதாக வென்றது
பந்துவீச்சில், ஜடேஜா, ஹர்பஜன்சிங், தாஹிர் ஆகியோர் உள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே புள்ளியை நோக்கி விளையாடினால் மும்பைக்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம். இந்த கலவையில் தான், குவாலிபயர் 2வது ஆட்டத்தில் டெல்லியை மிக எளிதாக வீழ்த்தி பைனலுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது.

மைதான கண்ணோட்டம்
ஹைதராபாத் மைதானத்தில் இதுவரை 69 ஆட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. அதில், முதலில் பேட் செய்த அணி 32 முறையும், முதலில் பந்து வீசி அணி 35 முறையும் வென்றிருக்கின்றன. மைதானத்தின் கண்ணோட்டத்தை வைத்து பார்க்கும் போது, மும்பை அணியில் கடந்த போட்டியில் விளையாடிய ஜெயந்த் யாதவுக்கு பதிலாக மிட்செல் மெக்லேகன் அணியில் இடம் பெறலாம்.

வாய்ப்பு கிடைக்குமா?
சென்னை அணியில், கடந்த போட்டியில் சொதப்பிய வேகப்பந்து வீச்சாளர் தாகூர் நீக்கப்படலாம். அவருக்கு பதிலாக முரளி விஜய் அல்லது துருவ் ஷோரே ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிட்டலாம்.

யார்? யார்?
மும்பை இந்தியன்ஸ் உத்தேச அணி: ரோகித் சர்மா (கேப்டன்), டீ காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கரென் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, மிட்செல் மெக்லேகன் (அ) ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், லசித் மலிங்கா, ஜஸ்பிரிட் பும்ரா.

அணியின் விவரம்
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி: எம்.எஸ் தோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், டுபெளிசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, முரளி விஜய் (அ) துருவ் ஷோரே, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.


Click it and Unblock the Notifications