Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா, சாவா போராட்டத்துடன் ஹைதராபாத்துடன் மும்பை இன்று மோதல்

ஹைதராபாத்: நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இன்று களம் காண்கிறது. இப்போட்டியில் தோல்வியடைந்தால் அரையிறுதி கனவு தகர்ந்து போய் தொங்கிய முகத்துடன் வீட்டுக்கு நடையை கட்ட வேண்டியதுதான் அம்பானியின் மும்பை இந்தியன்ஸ்.

என்ன வளம் இல்லை..

என்ன வளம் இல்லை..

ஐபிஎல்-7 சீசனில் ஐக்கிய அரபு எமிரேட்டில் நடைபெற்ற 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவி முட்டையுடன் தாயகம் திரும்பியது நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணியை மேற்பார்வையிட சச்சின் டெண்டுல்கர், ரிக்கிபாண்டிங், அனில்கும்ப்ளே, ஜான்டிரோட்ஸ் என பல ஜாம்பவான்கள் இருந்தும் அந்த அணி தோற்றது. அளவுக்கு மிஞ்சிய கிழச்சிங்கங்கள் அணியை மேற்பார்வையிடுவதுதான் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம்சாட்டினர்.

சோம்பல் முறித்தது

சோம்பல் முறித்தது

அரபு எமிரேட்ஸில் இருந்து தாயகம் திரும்பியபிறகு நடைபெற்ற போட்டிகளில் தோல்வியே காணாமல் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு தோல்வியின் சுவையை காண்பித்து அடடே.. போட வைத்தது மும்பை. அதற்கு அடுத்த போட்டியிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மண்ணை கவ்வ வைத்து பார்முக்கு திரும்பி விட்டதைப்போல சோம்பல் முறித்தது மும்பை இந்தியன்ஸ்.

கடிவாளம் போட்ட டோணி

கடிவாளம் போட்ட டோணி

இரு போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிபெற்றாலும், சென்னை சூப்பர் கிங்சுடனான போட்டியில் டோணி படையிடம் தோல்வியடைந்தது ரோகித்&கோ. வெற்றிப்பயணத்தின் தொடக்கத்திலேயே குதிரை கடிவாளம் போடப்பட்டு திசை திருப்பப்பட்டுள்ளதால் மும்பை ரசிகர்கள் கவலையிலுள்ளனர். 8 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி வெறும் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

செய் அல்லது செத்துமடி

செய் அல்லது செத்துமடி

ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியும், மும்பையும் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால்தான் ஐபிஎல் தொடரில் உயிர்ப்புடன் இருக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் மும்பை சிக்கியுள்ளது. அல்லது அரையிறுதி வாய்ப்பை இழந்து நடையை கட்ட வேண்டியதுதான். செய், அல்லது செத்து மடி என்ற கோஷத்துடன்தான் பந்து வீச்சில் பலம் வாய்ந்த ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பலமான பவுலிங்

பலமான பவுலிங்

ஹைதராபாத் அணியை பொறுத்தளவில் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் டெய்ல் ஸ்டெயின் மற்றும் இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இருப்பது பெரும் பலம். 8 மேட்சுகளில் 15 விக்கெட்டை வீழ்த்தி ஐபிஎல் சீசன்-7ல் இப்போதைக்கு அதிக விக்கெட் எடுத்த வீரர் இவர்தான். ஸ்டெயின், புவனேஸ்வர்குமார் அபாயகரமான ஜோடியாக பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் 4 மேட்சுகளில் வெற்றி பெற்றிருப்பதால் மும்பை அளவுக்கு இந்த போட்டி அவர்களுக்கு நெருக்கடியாக இருக்காது.

பலவீனமான பேட்டிங்

பலவீனமான பேட்டிங்

ஹைதராபாத் அணியின் மிகப்பெரிய கவலை அதன் பேட்டிங் சொதப்பல்கள்தான். ஷிகர் தவான் கூட இன்னும் கேப்டன் நாக் ஆடவில்லை. ஆஸ்திரேலிய இறக்குமதிகளான டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்களே தவிர பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை. மழை குறுக்கீடால் ஓவர்கள் குறைக்கப்பட்ட கடந்த போட்டியில் டெல்லியை வீழ்த்தியது ஹைதராபாத் அணியின் தன்னம்பிக்கையை கூட்டியிருக்கும் என்று நம்பலாம். இரு அணிகளும் மோதும் போட்டி இரவு 8 மணிக்கு துவங்குகிறது.

Story first published: Monday, May 12, 2014, 15:51 [IST]
Other articles published on May 12, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+