Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு சாதனைகள் இருந்தும், இனிமே டெஸ்டில் நோ சான்ஸ்..! கடும் நெருக்கடியில் ஆளான இந்திய வீரர்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் ரோகித்துக்கு வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் எதிர்காலத்திலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம்பெறுவது கடினமாக பார்க்கப்படுகிறது.

50 ஓவர் மற்றும் டி20 கிரிக்கெட்டின் பெஸ்ட் வீரர் ரோகித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர். இனி அந்த சாதனை முறியடிக்கப்படுமா என்று தெரியாது.

அபார திறமை, நல்ல ரெக்கார்டு இருந்தும் டெஸ்ட் போட்டியில் அவர் இடம் பெறுவது குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் ரோகித் சர்மா.

சில வாய்ப்புகள்

சில வாய்ப்புகள்

தொடக்க காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான நேரத்தில் நன்றாகவே விளையாடினார். ஆனால், பின்னர் ஒரே சொதப்பல் ரகம். ஓரங்கட்டப்பட்ட ரோகித்திற்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திக் கொள்வதில்லை.

2018ம் ஆண்டு போட்டி

2018ம் ஆண்டு போட்டி

2018ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரகானேவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்திருந்த ரோகித் சர்மா, சரியாக ஆடவில்லை. அவர் நீக்கப்பட்டு மீண்டும் ரகானவே அணியில் சேர்க்கப் பட்டார். அதன்பின்னர் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்தார்.

மீண்டும் சேர்ப்பு

மீண்டும் சேர்ப்பு

உள்ளே,வெளியே ஆடிக் கொண்டிருந்த ரோகித் தான் உலக கோப்பையில் அபாரமாக ஆடி 5 சதங்களை வெளுத்தார். ரோகித்தின் அபாரமான பார்மை கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் முதல் டெஸ்டில் உட்கார வைக்கப்பட்டார்.

நிரூபிக்க வேண்டுகோள்

நிரூபிக்க வேண்டுகோள்

ரகானே, விஹாரி இருவருமே நல்ல பார்மில் உள்ளனர். கிங்ஸ்டன் 2வது டெஸ்ட் போட்டியிலும் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை. இதை குறிப்பிட்டுள்ள முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், ரோகித் இனிமேல் அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.. வாய்ப்பு கிடைத்தால், அதை வீணடித்துவிடாமல் கண்டிப்பாக நன்றாக ஆடி அவரை நிரூபிக்க வேண்டும் என்றார்.

மறந்துவிட வேண்டியது தான்

மறந்துவிட வேண்டியது தான்

ஆக மொத்தத்தில் இனி 11 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் இடம்பெற்றால் கடும் நெருக்கடி காத்திருக்கிறது. நன்றாக ஆடி தம்மை மீண்டும் நிலைநிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை எனில்.. டெஸ்ட் வாய்ப்புகளை அவர் இனி மறந்துவிட வேண்டியதுதான்.

Story first published: Saturday, August 31, 2019, 17:35 [IST]
Other articles published on Aug 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+