Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நோ பாலில் விக்கெட்டை விடுங்க…. ஜடேஜாவின் இந்த காமெடியை கவனிச்சீங்களா…

டெல்லி: இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேடா நோ பாலில் விக்கெட் வீழ்த்தியது பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், அவர் செய்த மற்றொரு காமெடியை பலர் கவனிக்கவில்லை.

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்தது. இது டிராவில் முடிய, இந்தியா 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது.

Jadeja amused


டெல்லி டெஸ்ட் போட்டியில், மாஸ்க் அணிந்து இலங்கை வீரர்கள் கலாய்தது ஒரு புறம் இருந்தாலும், நோ பாலில் விக்கெட் வீழ்த்தி, ரவீந்திர ஜடேஜா விக்கெட் வீழ்த்தியது வைரலாக பரவியது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். ஆனால் அதில் சந்தேகம் இருந்ததால், மைதானத்தில் இருந்த அம்பயர், மூன்றாவது அம்பயரிடம் கேட்டார். மேத்யூஸ் அவுட் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் வீடியோவில் பார்க்கும்போது, ஜடேஜா நோ பால் வீசியது பின்னர் தெரியவந்தது. நோ பாலில் ஜடேஜா விக்கெட் வீழ்த்தியது குறித்து பலர் சமூக தளங்களில் கிண்டலடித்தனர்.

இது ஒருபுறம் இருக்க, ஜடேஜா மற்றொரு காமெடி செய்தது பலருடைய கவனத்தில் வராமல் போய்விட்டது. சுரங்கா லக்மலுக்கு ஜடேஜா பந்து வீசினார். பந்து பேட்டில் பட்டு, ஸ்டம்ப்பில் பட்டது. ஆனால் அதை கவனிக்காமல், எல்பிடள்யூ கேட்டு ஜடேஜா அம்பயரிடம் மன்றாடினார்.

மற்ற வீரர்கள், டேய் அவன் அவுட்டுடா என்று கூறிய பிறகுதான், தான் விக்கெட் வீழ்த்தியதை ஜடேஜா உணர்ந்து அசடு வழிந்தார்.
Story first published: Friday, December 8, 2017, 20:32 [IST]
Other articles published on Dec 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+