Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 போட்டியிலேயே சிறந்த பவுலிங்.. ஜடேஜா நிகழ்த்திய மேஜிக்..அதிர்ச்சியில் நின்ற ஸ்டோனிஸ் - வீடியோ

லக்னோ : கிரிக்கெட்டில் இந்த நூற்றாண்டின் சிறந்த பந்து என்றால், வார்னே வீசிய பந்தை தான் அனைவரும் சொல்வார்கள். தற்போது டி20 கிரிக்கெட்டிலேயே சிறந்த பந்து என்று சொன்னால், அதற்கு இன்று விடை கிடைத்துவிட்டது.

டாஸ் வென்ற கேப்டன் தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து சிஎஸ்கே வீரர்கள் துல்லியமாக பந்துவீசி, கடும் நெருக்கடியை கொடுத்தனர். மெயர்ஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, தீக்சனா வீசிய ஒவரில் லக்னோ வீரர்கள் மனோன் வொஹ்ரா, குர்னால் பாண்டியா ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

Jadeja century of the ball in t20 cricket to dismiss marcus stonis

இதனையடுத்து, களத்துக்கு வந்த ஸ்டோனிஸ், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது தான் ஸ்டோனிஸ்க்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஜடேஜா வீசிய பந்து லெக் சைட் ஸ்டம்ப் லைனில் குத்தி, ஆப் ஸ்டம்பின் டாப்பை காலி செய்தது.

இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஸ்டோனிஸ், என்ன நடந்தது- எப்படி நடந்தது என்று அதிர்ச்சியில் நின்றார். தாம் போல்ட் ஆகிவிட்டோம் என்ற அதிர்ச்சி மறையவே அவருக்கு 10 விநாடிகள் தேவைப்பட்டது.

இதனையடுத்து, ஸ்டோனிஸ் மெல்லமாக பெவிலியன் நோக்கி நடந்தார். இதனை பார்த்த ரசிகர்களும், இது டி20 கிரிக்கெட்டா, இல்லை டெஸ்ட் கிரிக்கெட்டா, பந்து இப்படி திரும்புகிறது என்று ஜடேஜாவை பாராட்டி வருகின்றனர். மேலும் என்ன தான் 200 ரன்கள் அடிக்கப்பட்டாலும், LOW SCORE த்ரில்லர் எப்போதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

Story first published: Wednesday, May 3, 2023, 17:25 [IST]
Other articles published on May 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+