தன் திருமணத்திற்கு டோணி, ரெய்னாவை கூப்பிடலையே 'சர்' ஜடேஜா!
அகமதாபாத்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது திருமணத்திற்கு சக கிரிக்கெட் வீரர்கள் டோணி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரை அழைக்கவில்லை.
ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கும் என்ஜினியர் ரீவா சொலான்கிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர்களின் திருமணம் ஐபிஎல் 9வது சீசன் போட்டிகளுக்கு மத்தியில் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஜடேஜாவுக்கு அவரது வருங்கால மாமனார் ஆடி க்யூ7 காரை பரிசளித்து அசத்தியுள்ளார்.

ஜடேஜா
ஜடேஜா தனது திருமணத்திற்கு வருமாறு உற்றார், உறவினர்களுக்கு பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்து வருகிறார். இதற்கிடையே அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

டோணி
ஜடேஜா தனது திருமணத்திற்கு கேப்டன் டோணி, சக வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோரை அழைக்கவில்லையாம். தல டோணிக்கு ஜடேஜா பத்திரிக்கை வைக்கவில்லையா? ஏன் இப்படி செய்தார் என்று பலரும் வியக்கையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நண்பேன்டா
திருமணத்திற்கு அழைக்காதது பற்றி ஜடேஜா பெங்காளி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, டோணியும், ரெய்னாவும் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள். அவர்களுக்கு பத்திரிக்கை வைத்து அழைக்க வேண்டியது இல்லை. அவர்களாகவே திருமணத்திற்கு நிச்சயம் வருவார்கள் என்றார்.

சிஎஸ்கே
டோணி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் ஐபிஎல் போட்டிகளில் இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்து விளையாடியவர்கள். இம்முறை ஜடேஜாவும், ரெய்னாவும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடுகிறார்கள். டோணி ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.


Click it and Unblock the Notifications