For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாய்ப்பே இல்லை.. கபில்தேவ் கூட பண்ணது இல்ல!! 60 ஆண்டுகளில் முதல் முறை.. ஜடேஜா படைத்த அரிய சாதனை..

மொஹாலி: இலங்கை அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜடேஜா 60 ஆண்டுகளுக்கு பிறகு அரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டாஸ் ஒன்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் ஜடேஜா 175 ரன்களை குவித்தார்.

இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 574 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் களமிறங்கியது.

ஜடேஜா அசத்தல்

ஜடேஜா அசத்தல்

பேட்டிங்கில் கலக்கிய ஜடேஜா, பந்துவீச்சிலும் அசத்தினார். தனது குரு வார்னேவே பெருமைப்படும் அளவுக்கு துல்லியமாக பந்துவீசினார். ஜடேஜா ஓவர் வந்ததுமே இலங்கை வீரர்களின் கால்கள் பரதநாட்டியம் ஆடின. முதல் இன்னிங்சில் கேப்டன் கருணரத்னேவை நேற்று வீழ்த்தினார் ஜடேஜா.

மாயாஜால பந்துவீச்சு

மாயாஜால பந்துவீச்சு

108 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற ஸ்கோருடன் 3வது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்தது. இலங்கை வீரர்களை ஒரு முனையில் இருந்து வேகப்பந்துவீச்சாளர்கள் அழுத்தம் கொடுக்க, மறுமுனையில் ஜடேஜா தனது மாயாஜால பந்துவீச்சைவீசினார். திக்வெல்லாவை 2 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.

அரிய சாதனை

அரிய சாதனை

இதன் பின்னர் ஓரே ஓவரில் ஜடேஜா, லக்மல் மற்றும் எம்புல்தேனியா ஆகியோரை டக் அவுட்டாகினார். பின்னர் லகிரு குமாராவை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்க, இலங்கை அணி 174 ரன்களுக்கு சுருண்டது. 5 விக்கெட் வீழ்த்தி ஜடேஜா அசத்தினார். இதன் மூலம் ஒரே ஆட்டத்தில் 150 ரன்களுக்கு மேல் அடித்தும், 5 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார்.

3வது இந்தியர்

3வது இந்தியர்

இதற்கு முன்னதாக 1960ஆம் ஆண்டு இந்திய வீரர் பாலி உமர்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார். 1952ஆம் ஆண்டு வினோத் மான்கட் முதல் முறை இந்த சாதனை படைத்துள்ளார். உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 6வது வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றார். 7வது வீரராக இறங்கி இந்த சாதனையை நிகழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

Story first published: Sunday, March 6, 2022, 15:58 [IST]
Other articles published on Mar 6, 2022
English summary
Jadeja Five Fer against srilanka created unique record in test cricket வாய்ப்பே இல்லை.. கபில்தேவ் கூட பண்ணது இல்ல!! 60 ஆண்டுகளில் முதல் முறை.. ஜடேஜா படைத்த அரிய சாதனை..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+