Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏமாந்த ஜடேஜா.. ஜஸ்ட் எட்ஜ்.. முன்னே வந்து கைத்தட்டி கோபத்தை தீர்த்துக் கொண்ட வாக்னர்

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இன்று நடக்கும் ரிசர்வ் டே ஆட்டத்தில், இந்திய அணி தனது ஆறாவது விக்கெட்டை இழந்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் ஆறாவது நாள் (ரிசர்வ் டே) ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

ஆனால், இன்றைய ஆட்டம் தொடங்கி மதிய உணவுக்கு முன்பாகவே கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே அவுட்டாக, இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட, இப்போது ஜடேஜாவும் அவுட்டாகியுள்ளார்.

 நியூசிலாந்து லீடிங்

நியூசிலாந்து லீடிங்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின், முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர். பிறகு, நேற்று நடந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.

 தடுமாறும் இந்தியா

தடுமாறும் இந்தியா

இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி எல்பிடபிள்யூ ஆக்கினார். நேற்றைய 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன்.23) மாற்று நாளில் தொடங்கிய ஆட்டத்தில், கேப்டன் கோலி மிக விரைவாக 13 ரன்களில், ஜேமிசன் ஓவரில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அதேபோல், புஜாராவும் 15 ரன்களில் ஜேமிசன் பந்தில் வெளியேறினார். பிறகு ரஹானேவை 15 ரன்களில் போல்ட் வெளியேற்ற, இந்தியா லன்ச்சுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

பண்ட்

பண்ட்

இந்நிலையில், மதிய உணவுக்கு பிறகு ஜடேஜா வாக்னர் ஓவரில் அவுட்டாகியுள்ளார். இடது கை பேட்ஸ்மேன்களான ஜடேஜா மற்றும் பண்ட்டுக்கு 'round the wicket'ல் வீசிக் கொண்டிருந்தார் வாக்னர். எல்லா பந்துகளும் பவுன்ஸ், ஷார்ட் பிட்ச் என்று எகிறின. தூக்கி அடித்தால் கேட்ச், அவாய்ட் பண்ண நினைத்தால், எட்ஜ் ஆக வாய்ப்பு என்று கடுமையாக நெருக்கடி கொடுத்தார் வாக்னர். ஜடேஜாவும், மிக சாமர்த்தியமாக 49 பந்துகள் வரை சந்தித்து, வாக்னரை டீல் செய்து வந்தார். ஆனால், கடைசியில் 16 ரன்களில், அற்புதமான லைன்ட் அண்ட் லெந்த் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார் ஜடேஜா.

 ஒரு மணி நேரத்தில்

ஒரு மணி நேரத்தில்

தற்போது இந்திய அணி 115 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், எப்படியாவது, மேற்கொண்டு 60 - 80 ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதே இந்திய அணியின் இலக்காக இருக்கும். 170 - 180 என்று டார்கெட் நிர்ணயிக்கும் பட்சத்தில், நியூசிலாந்துக்கும் நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால், ரிஷப் நின்று அடித்தால் மட்டுமே இது சாத்தியம். சஸ்பென்ஸ் நிறைந்த போட்டியாக மாறியுள்ளது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்.

Story first published: Wednesday, June 23, 2021, 21:56 [IST]
Other articles published on Jun 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+