Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜா : என்னை டீம்ல எடுத்தா எடுங்க.. எடுக்காட்டி போங்க.. நான் குதிரை லாயத்துக்கு போறேன்!!

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன டெஸ்ட் தொடரின் இரண்டாம் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அந்த போட்டிக்கான அணியில் ஜடேஜாவுக்கு இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜடேஜா அடிலெய்டு டெஸ்ட்டில் ஆடவில்லை. அந்த டெஸ்டின் வெற்றிக்கு பின்னர், ஜடேஜா அடிலெய்டு நகரில் குதிரைகளுடன் நேரம் செலவிட்டுள்ளார்.

அடிலெய்டு டெஸ்டில் வெற்றி

அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணியில் ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் மட்டுமே இடம் பெற்றார். ஜடேஜா அணியில் இடம் பிடிக்கவில்லை. முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஸ்வின் இரண்டாம் டெஸ்டிலும் வாய்ப்பு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

குதிரை லாயத்துக்கு போன ஜடேஜா

குதிரை லாயத்துக்கு போன ஜடேஜா

ஜடேஜாவுக்கு இரண்டாம் டெஸ்டில் இடம் கிடைக்குமா என தெரியாத நிலையில், அவர் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்கான லயசன் ஆபிசர் க்ரேய்க் நியூட்டன்-இன் வீட்டில் இருக்கும் குதிரை லாயத்திற்கு சென்று அங்கே குதிரைகளுடன் நேரம் செலவிட்டார்.

குதிரைகள் பிடிக்கும்

குதிரைகள் பிடிக்கும்

ஜடேஜாவுக்கு குதிரைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என தெரிகிறது. ராஜ்புத் பரம்பரையை சேர்ந்த ஜடேஜா குதிரைகள் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்புவார். எந்தளவிற்கு ஜடேஜா குதிரை வெறியர் என்றால், தன் கையில் குதிரையை பச்சை குத்திக் கொள்ளும் அளவிற்கு வெறியர்.

ஜடேஜா என்ன சொல்கிறார்

ஜடேஜா என்ன சொல்கிறார்

இது பற்றி பேசிய ஜடேஜா, "நீங்கள் குதிரை பற்றி தேடத் துவங்கினால் அதற்கு முடிவே இல்லை. அது வேறு ஒரு உலகம். அவை மிகவும் நம்பகமான உயிரினம்" என்று குறிப்பிட்டார்.

பெர்த் டெஸ்ட் வாய்ப்பு

பெர்த் டெஸ்ட் வாய்ப்பு

பின்னர், அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவரால் இரண்டாம் டெஸ்டில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், ஜடேஜாவுக்கு இரண்டாம் டெஸ்டில் ஆட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 13 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் ஜடேஜா பெயரும் இடம் பெற்றுள்ளது. அஸ்வின் இல்லாத நிலையில், சுழற் பந்துவீச்சுக்கு ஜடேஜா மட்டுமே பொருத்தமான வீரர். அதனால், இரண்டாம் டெஸ்டில் ஜடேஜா ஆட அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, December 13, 2018, 14:03 [IST]
Other articles published on Dec 13, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+