Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபில்தேவ்க்கு பிறகு சாதனை படைக்க போகும் ஜடேஜா.. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சாதிப்பாரா?

பிரிட்ஜ்டவுன் : வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை தொடர்ந்து ஜடேஜாவும் ஒரு மாஸ் சாதனையை படைக்க இருக்கிறார்.இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்கும் ஜடேஜா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிகவும் பிரம்மாண்ட சாதனைகளை படைத்து வருகிறார்.

குறிப்பாக இந்திய அணியின் பல வெற்றிக்கு ஜடேஜா முக்கிய காரணமாக இருக்கிறார். தற்போது உள்ள காலகட்டத்தில் கூட இந்திய அணியில் சமநிலைக்கு ஜடேஜாவின் பங்கு பெரும் முக்கியத்துவம் ஆகும்.

jadeja is all set to became second indian after kapil dev to reach the unique milestone

தற்போது பேட்டிங்கிலும் மாஸ் காட்டும் ஜடேஜா அணியின் ஏழாவது வீரராக களம் இறங்கி பெரிய ஷார்ட்டுகளை ஆடும் வல்லமையை உடையவர். இதைப்போன்று பந்து வீச்சிலும் 10 ஓவர்களை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதோடு முக்கிய விக்கெட்களையும் எடுக்க கூடியவர். இந்திய அணி உலக கோப்பையில் இம்முறை வெல்ல வேண்டும் என்றால் அதற்கு ஜடேஜா தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

பேட்டிங், பந்துவீச்சு மட்டும் இல்லாமல் ஃபீல்டிங்கிலும் ஜடேஜாவின் மாஸ் குறித்து நாம் சொல்லித் தெரிய தேவை இல்லை. இந்த நிலையில் ஜடேஜா ஒரு மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார். தற்போது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 191 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஜடேஜா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒன்பது விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய ஏழாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.இது மட்டுமல்லாமல் 200 விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்தினால் கபில்தேவுக்கு பிறகு 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் ஜடேஜாவுக்கு சொந்தமாகும்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய பந்துவீச்சில் முக்கிய வீரராக களமிறங்கும் ஜடேஜா ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் அக்சர் பட்டேலும், ஜடஜாவை போன்று இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை சுழற் பந்துவீச்சாளர் என்பதால் ஒரே உரையில் இரண்டு கத்தி இருப்பதற்கு சமமாகிவிடும். எனினும் அக்சர் பட்டேல் பேட்டிங் இந்தியாவுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியா இந்த வித்தியாசமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, July 26, 2023, 19:24 [IST]
Other articles published on Jul 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+