வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கழற்றிவிடப்படுகிறார் அந்த முக்கிய வீரர்..! தோனி தான் காரணமா?
போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் 20 ஓவர் போட்டியில் ஜடேஜா இடம்பெறுவதில் சிக்கல் எழுந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடுகிறது. உலக கோப்பை தோல்விக்கு பின்னர் வரக்கூடிய தொடர் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. உலக கோப்பை ஏமாற்றத்தை இந்த தொடரில் சரி செய்து விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர் பார்த்துள்ளனர்.
இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை முதலாவது டி 20 போட்டி நடை பெறுகிறது. தொடருக்கான டி20 அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா பெயரும் இடம் பெற்றது. தொடரின் டி20 உத்தேச அணியில் ஜடேஜா இருந்தாலும், ஆடும் 11 பேர் கொண்ட லெவனில் இருப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அசத்தல் ஆட்டம்
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் ஜடேஜா ஆடிய ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. தாம் யார் என்றும், ஆல் ரவுண்டர் எப்படி இருக்க வேண்டும் என்றும் நிரூபித்தவர். அதன் காரணமாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 வகை இந்திய அணியிலும் இடம் பெற்றார்.

திடீர் சிக்கல்
இந்நிலையில் டி20 போட்டிகளில் ஜடேஜா இறங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதன் காரணம் அவர் சீனியர் வீரர் என்பது தான். 2020ம் ஆண்டு டி 20 உலக கோப்பை போட்டிகளை கணக்கில் கொண்டு இளம் வீரர்களுக்கு அதிக அளவு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

அணி நிர்வாகம் முடிவு
அதன்படி, கருணால் பாண்டியா, ராகுல் சாகர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு சுழற்சி அடிப்படையில், டி 20 தொடரில் வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன் எதிரொலியாக, ஜடேஜா உத்தேச அணியில் இடம்பெற்றாலும், ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இருக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடினமான ஒன்று
இளம்வீரர்கள் வரவால் அவர் விளையாடும் வாய்ப்புகள் குறைவே. ஆக மொத்தத்தில் ஆடும் லெவனில் ஜடேஜா இறங்குவது சற்று கடினமே. ஆனால் ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது தவிர வேறொரு காரணமும் அதிகளவு சுட்டிக் காட்டப் படுகிறது. ஜடேஜா, தல தோனியிடம் நெருக்கமாக இருப்பவர். அவரால் அணிக்குள் வளர்த்துவிடப்பட்டவர் என்பதால் 20 ஓவர் போட்டிகளில் ஒதுக்கி வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications