Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2009ல பார்த்தது போலவே இப்பவும் பீல் பண்றேன்... ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இதே பீல்தான் இருக்கு!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கேவிற்காக விளையாடவுள்ளார் ரவீந்திர ஜடேஜா. இதற்கென தன்னுடைய பிட்னசை நிரூபித்து அணியில் இணைந்துள்ளார்.

மேலும் 7 நாட்கள் குவாரன்டையும் முடித்துவிட்டு அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார். நேற்றைய தினம் ரெய்னாவுடனான அவருடைய புகைப்படத்தை சிஎஸ்கே அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2009ல் தோனியை முதல் முறையாக பார்த்தபோது ஏற்பட்ட பரவசம் ஒவ்வொரு முறையும் தோன்றுவதாக ஜடேஜா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆல்-ரவுண்டர் ஜடேஜா

ஆல்-ரவுண்டர் ஜடேஜா

ஐபிஎல் 2021 தொடருக்கான சிஎஸ்கேவில் இணைந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. கடந்த ஜனவரியில் அவருக்கு ஆஸ்திரேலிய தொடரின்போது காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய பிட்னசை என்சிஏவில் நிரூபித்த அவர் சிஎஸ்கே அணியில் இணைந்ததுடன் தனது 7 நாட்கள் குவாரன்டைனையும் முடித்துள்ளார்.

புகைப்படம் வெளியிட்ட சிஎஸ்கே

புகைப்படம் வெளியிட்ட சிஎஸ்கே

மேலும் நேற்றைய தினம் சிஎஸ்கே பயிற்சி முகாம்களில் பங்கேற்று பயிற்சி மேற்கொண்டார். முன்னதாக அவர் குவாரன்டைனை முடித்ததை பாராட்டும்வகையில் சுரேஷ் ரெய்னாவுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது சிஎஸ்கே அணி.

ஒவ்வொரு முறையும் உற்சாகம்

இந்நிலையில் தான் கடந்த 2009ல் எம்எஸ் தோனியை சந்தித்தபோது தனக்கு ஏற்பட்ட உற்சாகம் தற்போதுவரை நீடித்து வருவதாகவும் ஒவ்வொரு முறையும் இதை தான் உணர்வதாகவும் ரவீந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை அவரை பார்க்கும்போதும் முதல் முறை பார்க்கும் சந்தோஷம் தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

3 மாதங்கள் 'நோ' போட்டி

3 மாதங்கள் 'நோ' போட்டி

கடந்த ஜனவரியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரின்போது இடது கட்டைவிரலில் ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, 3 மாதங்கள் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் அவர் மிஸ் செய்தார்.

Story first published: Friday, April 2, 2021, 19:52 [IST]
Other articles published on Apr 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+