For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யுவராஜ் தேவையில்லை... ஜடேஜா காயம் பத்தே நாளில் சரியாகிவிடும்: பிசிசிஐ

By Veera Kumar

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கும் முன்பாக ரவீந்திர ஜடேஜா உடல் நிலை சரியாகிவிடும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்தார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் காயத்தால் அவதிப்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் நல்ல பார்மில் உள்ள யுவராஜ் சிங் பெயர் அதில் இடம்பெறவில்லை.

ஜடேஜாவுக்கு காயம்

ஜடேஜாவுக்கு காயம்

காயமடைந்த ஆல்-ரவுண்டரான ஜடேஜாவுக்கு பதிலாக, மற்றொரு ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங்கை அணியில் சேர்த்திருக்கலாம் என்று அவரது ரசிகர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் ஜடேஜா எப்படியும் காயத்தில் இருந்து மீண்டு வந்துவிடுவார் என்கிறார் கிரிக்கெட் வாரிய செயலாளரான சஞ்சய் பட்டேல்.

தேறிவருகிறார்

தேறிவருகிறார்

இதுகுறித்து அவர் கூறியது: அணியை தேர்வு செய்யும் முன்பு ஜடேஜாவின் உடல் நிலை குறித்து உடற்பயிற்சியாளரிடம் கேட்டறிந்தோம். ஜடேஜா உடல் நலம் தேறியுள்ளதாகவும், இப்போது மீண்டும் பழையபடி உடல் நிலையை கொண்டுவரும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் உடற்பயிற்சியாளர் கூறினார்.

பத்தே நாளில் சரியாகிவிடும்

பத்தே நாளில் சரியாகிவிடும்

இன்னும் பத்து நாட்களுக்குள் ஜடேஜா உடல் நிலை சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனவே, முத்தரப்பு மற்றும் உலக கோப்பைக்கு முன்பாக அவர் உடல் நலம் தேறிவிடுவார்.

இஷாந்த் சின்ன காயம்

இஷாந்த் சின்ன காயம்

இஷாந்த் சர்மா லேசான காயம் அடைந்துள்ளார். இருப்பினும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க வேண்டாம் என்று உடற்பயிற்சியாளர் கேட்டுக் கொண்டதால், இஷாந்த் களமிறக்கப்படவில்லை. இவ்வாறு சஞ்சய் பட்டேல் தெரிவித்தார்.

Story first published: Wednesday, January 7, 2015, 11:40 [IST]
Other articles published on Jan 7, 2015
English summary
Rvindra Jadeja will be fit in ten days, says BCCI secratery Sanjay Patel.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+