Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னைக்கு கிடைத்த முதல் தமிழன்.. யார் இந்த ஜெகதீசன் நாராயண்?!

Recommended Video

புது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பெங்களூர்: ஐபிஎல் போட்டிக்கான இரண்டாம் நாள் ஏலம் இன்று நடக்கிறது. சென்னை அணி இரண்டு வருடம் கழித்து மீண்டும் போட்டிக்கு திரும்பி வந்து இருக்கிறது.

சென்னை அணி நேற்று முழுக்க வயதான வீரர்களை எடுத்து வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்து இளமையான வீரர்களை எடுத்துள்ளது.

இன்று இரண்டு வீரர்களை மட்டும் இதுவரை எடுத்து இருக்கிறது. தற்போது சென்னை அணிக்கு கோயம்புத்தூர் காரர் ஒருவர் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

யார் இவர்

யார் இவர்

ஜெகதீசன் நாராயண் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சிறந்த வலது கை பேட்ஸ்மேன். அதேபோல் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடியவர். டோணிக்கு காயம் ஏற்படும் சமயங்களில் இவர் இறக்கப்படலாம்.

வரலாறு

வரலாறு

இவர் இதுவரை ஐபிஎல் போட்டியில் விளையாடியதில்லை. அதே சமயத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிக்காக திண்டுக்கல் அணியில் விளையாடி இருக்கிறார். ரஞ்சி கோப்பை போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.

வாங்கியது

ஜெகதீசன் நாராயண் சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 20 லட்சம் கொடுத்து ஜெகதீசன் ஏலம் எடுக்கப்பட்டார். இவரது குறைந்தபட்ச தொகை 20 லட்சம் ஆகும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

தற்போது சென்னையில் இருக்கும் இளமையான வீரர் இவர்தான். இவருக்கு 22 வயது ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை அணியில் தமிழக வீரர் இல்லை என்ற குறைபாட்டை இவர் சரிசெய்துள்ளார்.

Story first published: Sunday, January 28, 2018, 13:56 [IST]
Other articles published on Jan 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+