Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகத்திலேயே இது தான் பெஸ்ட் ஜோடி.. அந்த 2 இந்திய வீரர்களையும் பாராட்டித் தள்ளிய ஆஸி. வீரர்!

மும்பை : தன் காலத்தில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் இருவரை புகழ்ந்து இருக்கிறார்.

தற்போது உலகில் இருக்கும் முன்னணி பந்துவீச்சு கூட்டணி என அவர்களை பாராட்டி இருக்கிறார்.

அந்த இருவர் பும்ரா மற்றும் முகமது ஷமி. இந்திய டெஸ்ட் அணியில் பும்ரா, ஷமியின் தாக்கம் போட்டிக்குப் போட்டி அதிகரித்து வருகிறது.

பும்ரா வளர்ச்சி

பும்ரா வளர்ச்சி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறுகிய காலத்தில் உலக அளவில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். அவரைக் கண்டு அனுபவ பேட்ஸ்மேன்கள் கூட அஞ்சும் நிலை உள்ளது.

2018இல் அறிமுகம்

2018இல் அறிமுகம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2018 ஜனவரியில் டெஸ்ட் போட்டிகளில் அவர் அறிமுகமானார். வெறும் 12 டெஸ்ட் போட்டிகளில், பும்ரா 62 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 19.24 மட்டுமே.

முகமது ஷமியுடன் கூட்டணி

முகமது ஷமியுடன் கூட்டணி

பும்ரா புதிய பந்தில் எதிரணியை திணற வைப்பதில் சக வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமியுடன் நல்ல கூட்டணியை அமைத்து வருகிறார். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்து அனைத்து கிரிக்கெட் போட்டி வடிவங்களிலும் உச்சகட்டத்தில் இருக்கிறார்.

அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்

அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்

மறுபுறம், ஷமி இந்திய அணியில் ஆடத் துவங்கிய காலத்தில் இருந்து மாறுபட்டு, தற்போது அச்சுறுத்தும் பந்துவீச்சாளராக மாறி உள்ளார். ரிவர்ஸ் ஸ்விங் செய்வதிலும், இரண்டாம் இன்னிங்க்ஸில் விக்கெட்களை அள்ளுவதிலும் சிறந்து விளங்குகிறார்.

உலகின் சிறந்த ஜோடி

உலகின் சிறந்த ஜோடி

ஆஸ்திரேலியாவின் சிறந்த முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜேசன் கில்லெஸ்பி இந்த இந்திய ஜோடியை தன் பேட்டியில் பாராட்டி இருக்கிறார். பும்ரா, ஷமி ஜோடி உலகின் சிறந்த பந்துவீச்சு ஜோடிகளில் ஒன்று என பாராட்டினார்.

பந்துவீச்சில் ஆஸி, இந்தியா

பந்துவீச்சில் ஆஸி, இந்தியா

அவர் கூறுகையில், "இந்தியா ஒரு அருமையான பந்துவீச்சு தாக்குதலைக் கொண்டுள்ளது. தற்போது உலகில் சில அற்புதமான வேகப் பந்துவீச்சு தாக்குதல்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் வேகப் பந்துவீச்சு தாக்குதல்களைப் பார்த்து நான் மிகவும் ரசிக்கிறேன்" என்றார்.

இந்திய கூட்டணி பற்றி என்ன சொன்னார்?

இந்திய கூட்டணி பற்றி என்ன சொன்னார்?

மேலும், "எனது கருத்துப்படி மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சை எளிதாக கடந்து செல்வது கடினம். அதே சமயம், பும்ரா, ஷமி கூட்டணி உலகின் மிக அற்புதமான பந்துவீச்சு கூட்டணியில் ஒன்றாகும்" என்று கில்லெஸ்பி கூறினார்.

இது ஆச்சரியமில்லை

இது ஆச்சரியமில்லை

தற்போதைய இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்கம் குறித்து கில்லெஸ்பி கூறுகையில், "இந்தியா வேகப்பந்து வீச்சில் உயர்ந்து இருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. இந்தியாவில் எப்போதும் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்" என்றார்

கேப்டன் கோலி

கேப்டன் கோலி

கேப்டன் விராட் கோலி தனது பந்து வீச்சாளர்களை நம்பி, ஆதரித்து வாய்ப்பு அளிப்பதும், இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட உதவுவதாக கூறி இருக்கிறார் கில்லெஸ்பி.

Story first published: Friday, January 3, 2020, 19:49 [IST]
Other articles published on Jan 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+