For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா.. அதிரடி மாற்றத்தை அறிவித்த பிசிசிஐ.. 3 மாதம் பிறகு வருகை

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தற்போது காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டார். இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்த பந்துவீச்சாளராக விளங்கி வரும் பும்ரா தனிநபராக ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர்.

இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு பும்ரா காயம் அடைந்து விலகியதால் அது ரோகித் சர்மா படைக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

இதனால் அரை இறுதியில் இங்கிலாந்திடம் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை தழுவியது.

முக்கிய தொடர்

முக்கிய தொடர்

இதனை தொடர்ந்து நடைபெற்ற நியூசிலாந்து, வங்கதேசத்துக்கு எதிரான தொடர்களில் பும்ரா விளையாடவில்லை. தற்போது அறிவிக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடருக்கும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரும் பிப்ரவரி மாதம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்றுக்கு செல்ல முடியும்.

உடல் தகுதி

உடல் தகுதி

இதில் பும்ரா இல்லை என்றால் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கருதப்பட்டது. இந்த நிலையில் தான் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி தனது உடல் தகுதியை பும்ரா நிரூபித்து இருக்கிறார். இதனை அடுத்து மருத்துவர்கள் மற்றும் தேர்வு குழுவினர் பும்ராவின் மருத்துவ அறிக்கையை பரிசோதித்து இருக்கிறார்கள். இதில் பும்ரா முழுமையாக குணமடைந்து போட்டியில் விளையாட 100 சதவீதம் உடல் தகுதியை எட்டிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காரணம் இது தான்

காரணம் இது தான்

இதனை அடுத்து பும்ரா இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காயத்திலிருந்து திரும்பி உள்ள பும்ராவுக்கு மேட்ச் ப்ராக்டிஸ் வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை மற்றும் நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா விளையாடுவதன் மூலம் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது பழைய பார்மை மீட்க வசதியாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்,இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர், சாஹல்,குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல்,பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஆர்ஸ்தீப் சிங்

Story first published: Tuesday, January 3, 2023, 16:46 [IST]
Other articles published on Jan 3, 2023
English summary
Jasprit Bumrah added in to odi squad for srilanka series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+