Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி, ரோகித், தோனி யார் சிறந்த கேப்டன்? ஓபனாக பதில் சொன்ன பும்ரா

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ரசிகர்கள் மத்தியில் பலவிதமான பதில்கள் இருக்கும். ஒரு சிலர் தோனி என்றும் ஒரு சிலர் ரோகித் சர்மா என்றும், ஒரு சிலர் விராட் கோலி என்றும் பதிலளிப்பார்கள். மூன்று கேப்டன்களுமே அனைத்து விதமான சாதனைகளையும் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கொடுத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் மூன்று கேப்டன்கள் குறித்தும் நட்சத்திர வீரர் பும்ரா ஓபனாக பதில் அளித்து இருக்கிறார். இந்த மூன்று கேப்டன்கள் தலைமையில் பும்ரா விளையாடி இருக்கிறார். இது குறித்து பும்ராவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு பும்ரா பதில் அளித்தார்.

cricket Jasprit Bumrah MS Dhoni Virat kohli

அதில் ரோகித் சர்மாவின் கீழ் நான் நிறைய போட்டிகளில் விளையாடிருக்கின்றேன். மும்பை அணியில் கேப்டன் ஆகவும் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் செயல்பட்டு இருக்கிறார். ரோஹித்துக்கு பவுலர்கள் மீது எப்போதுமே ஒரு நல்ல மதிப்பு இருக்கும். அப்படி ஒரு சில கேப்டன்களில் அவரும் ஒருவர். ரோகித் சர்மா பிடிவாதக்காரர் கிடையாது.


நாம் ஏதேனும் கருத்துக்களை சொன்னால், அதனை அவர் கேட்டுக் கொள்வார். மேலும் பவுலர்களின் திறமையை ரோகித் சர்மா அறிந்து கொண்டு கடினமான காலத்தில் கூட உறுதுணையாக நிற்பார். தோனி கேப்டனாக இருந்தபோது எனக்கு அணியில் பாதுகாப்பு கிடைத்தது. அவர் என் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்திருந்தார்.

தோனி எப்போதுமே அதித திட்டம் தீட்டுவதில் நம்பிக்கை உடையவர் கிடையாது. அவருடைய உள்ளுணர்வு படி செயல்படுவார் என்று கூறினார். இதை தொடர்ந்து விராட் கோலி குறித்து பேசிய பும்ரா, இந்திய அணியில் வீரர்களுக்கு உடல் தகுதி என்பது வேண்டும் என்பதை ஒரு ஃபார்முலாவாக உருவாக்கியவர் விராட் கோலி.


எப்போதுமே களத்தில் வெறித்தனமாக செயல்படுவார். தன்னுடைய இதயத்தை ஆடையாக அணிந்து கொண்டு விளையாடுவார் விராட் கோலி, தற்போது கேப்டனாக இல்லை என்றாலும் ஒரு நல்ல தலைவராக அணிக்கு இருக்கின்றார். கேப்டன் என்பது வெறும் பதவி மட்டும் தான், ஆனால் ஒரு அணி 11 வீரர்களால் தான் ஓடும் என்று பும்ரா கூறியுள்ளார்.

Story first published: Sunday, August 18, 2024, 18:16 [IST]
Other articles published on Aug 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+