மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா பல்வேறு சாதனைகளை தற்போது படைத்து வருகின்றார். 200 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் குறைந்த சராசரி வைத்திருக்கும் வீரரின் முதன்மையானவர் 48 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா மொத்தமாக 217 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கின்றார்.இதில் 15 முறை 5 விக்கெட் விழித்திருக்கிறார். ஆசியாவுக்கு வெளியே சேனா நாடுகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது.
இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் 89 போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்களும் 70 t20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டு களையும் விழித்திருக்கின்றார். ஐபிஎல் தொடரில் 145 போட்டியில் விளையாடி 183 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றதற்கு பும்ராவின் பங்கு முக்கிய காரணமாகும்.

இந்திய அணியில் பும்ரா விளையாடினால் அது மிகப் பெரிய பலத்தை ஏற்படுத்தும் என்று பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால் பும்ராவில் வாழ்க்கையில் ஆரம்பமே பல இன்னல்களை கொடுத்திருக்கின்றது. பும்ரா சிறுவயதில் இதே போல் தான் வித்தியாசமான ஆக்ஷனில் பந்து வீசுவார். அப்போது அவருடைய நண்பர்களும் மற்ற சிறுவர்களும் பும்ரா பந்தை எரிவதாகவும் அவர் சரியாகப் பந்தை வீசுவதில்லை என்றும் கூறி அவரை கிண்டல் செய்து இருக்கின்றார்கள்.
பும்ரா பயிற்சிக்கு வந்த போது அவர் பந்து வீசியதை பார்த்து அங்கு இருந்த பல வீரர்களும் அவர் பந்தை எறிவதாக குற்றம் சாட்டினர். எனினும் பயிற்சியாளர் திரிவேதி மட்டும் கொஞ்சம் பொறுமை காத்துக் கொண்டார். பும்ரா மீது எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் தொடர்ந்து மூன்று நாள் பும்ராவை பந்து வீச சொல்லி இருக்கின்றார்.
அப்போது பும்ராவை உற்று கவனித்த திருவேதி, பும்ரா விதிகளுக்கு உட்பட்டு தான் பந்து வீசுவதாகவும் ஆனால் அவருடைய ஆக்ஷன் வித்தியாசமாக இருப்பதால்தான் பலரும் அவரை பந்தை எறிவதாக குற்றம் சாட்டினர் என்பதை பயிற்சியாளர் புரிந்து கொண்டார். இது குறித்து பயிற்சி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பலரும் பும்ரா பந்தை எறிவதாக கூறினார்கள்.
ஆனால் நான் உற்று கவனித்ததில் பும்ரா சரியாக தான் பந்து வீசினார். இதில் எடுத்து நான் அவரை தொடர்ந்து பந்து வீச அனுமதித்த போது மற்ற சிறுவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அந்த வித்தியாசமான ஆக்ஷனில் 16 வயதில் அவர் வீசிய வேகம் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அவர் பந்து வீசியபோது பவுன்சும் அதிகமாக இருந்தது.அவருடன் விளையாடிய சிறுவர்கள் பலரும் அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள பயப்படுவார்கள்.
அது மட்டுமில்லாமல் பும்ரா சிறப்பாகவும் யாக்கர்களை வீசுவார். நான் அவரிடம் சொன்னது ஒன்றே ஒன்றுதான். எந்த காரணத்திற்காகவும் யார் எது சொன்னாலும் இந்த ஆக்சனை மட்டும் நீ மாற்றாதே. இதுதான் உன்னுடைய ஆயுதம். நீ உன்னுடைய லைன் அல்லது லெங்த்தை வேண்டுமானாலும் மாற்றிக்கொள். ஆனால் இந்த ஆக்ஷனை மாற்றாதே. இதுதான் உன்னுடைய இயல்பான ஆக்சன். இயற்கையானதை என்றுமே மாற்றக்கூடாது என்று நான் அறிவுறுத்தினேன். அது அவருக்கு பலமாக மாறியது என திரிவேதி கூறியுள்ளார்.