Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே போட்டியில் 3 பிரமாண்ட சாதனைகள்.. இங்கிலாந்து மண்ணில் கொடி நாட்டிய பும்ரா.. ரசிகர்கள் வியப்பு!!

லண்டம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா பெரும் சாதனைகளை படைத்துள்ளார்.

Recommended Video

IND vs ENG 1st ODI இந்திய அணி அபார வெற்றி *Cricket

இரு அணிகளும் மோதிய இந்த போட்டி லண்டன் நகரத்தில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதல் ஒருநாள் போட்டி

முதல் ஒருநாள் போட்டி

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜஸ்பிரித் பும்ராவின் வேகத்தில் சிக்கி திணறியது. அவர் வீசிய ஓவரில் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய், ஜோ ரூட், லிவிங்ஸ்டன் என 3 வீரர்கள் டக் அவுட்டாகினர். இதுமட்டுமின்றி பேர்ஸ்டோ (7), டேவிட் வில்லி (21), ப்ரைடன் கார்ஸ் (15) ரன்களுக்கும் நடையை கட்டினர். மொத்தமாக 7.2 ஓவர்களை வீசிய பும்ரா 5 விக்கெட்களை கைப்பற்றி 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

பும்ராவின் சாதனை

பும்ராவின் சாதனை

இந்நிலையில் இந்த போட்டியின் மூலம், ஜஸ்பிரித் பும்ரா பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் ஒரே போட்டியில் அதிக விக்கெட்களை எடுத்த வீரர் இந்தியர் என்ற பெருமையை பும்ரா படைத்தார்.

சர்வதேச அளவு

சர்வதேச அளவு

சர்வதேச அளவில் பார்த்தால் இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய 4வது வீரர் என்ற பெருமையை பும்ரா படைத்தார். 2021ம் ஆண்டு வக்கர் யோனிஸ் 7/36 எடுத்திருந்தார். அதன் பின் வின்ஸ்டன் டேவிஸ் 7/51 மற்றும் கேரி கில்மர் 6/14 விக்கெட்களை எடுத்தனர். தற்போது 4வது வீரராக பும்ரா உருவெடுத்துள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜஸ்பிரித் பும்ரா அடுத்தடுத்து சாதனைகளை புரிந்து வருகிறார். 5வது டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்களை விளாசியிருந்தார். தற்போது டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்தை திணறடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Tuesday, July 12, 2022, 20:39 [IST]
Other articles published on Jul 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+