Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பையை விட பும்ரா தான் முக்கியம்.. ரோகித் சர்மா தடாலடி.. முயற்சி செய்தும் பலன் இல்லை என பேச்சு

மெல்போர்ன் : உலக கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை தான் முக்கியம் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பாக கேப்டன்கள் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் ரோகித் சர்மா இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா பும்ராவின் காயம் குறித்து பல மருத்துவர்களிடம் ஆய்வு செய்ததாக கூறினார்.

பெரிய ரிஸ்க்

பெரிய ரிஸ்க்

ஆனால் யாரும் திருப்திகரமான பதிலை கொடுக்கவில்லை. உலகக்கோப்பை மிகவும் முக்கியம்தான். ஆனால் அதைவிட பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் முக்கியம். 27 வயது தான் பும்ராவுக்கு ஆகிறது. இன்னும் அவர் நிறைய கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். டி20 உலக கோப்பையில் காயத்துடன் அவரை விளையாட வைப்பது மிகவும் ரஸ்க் ஆகும்.

மிஸ் செய்வோம்

மிஸ் செய்வோம்

நாங்கள் பேசிய அனைத்து மருத்துவர்களும் இதையேதான் கூறினார்கள். அவர் முன் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. அவர் இந்தியாவுக்காக இன்னும் அதிக போட்டிகள் விளையாடி வெற்றி பெற்று தருவார். ஆனால் இந்த தொடரில் நாங்கள் மிஸ் செய்வது உண்மைதான். வீரர்கள் காயம் அடைய கூடாது என்பதற்காக வீரர்களை அணி நிர்வாகம் பத்திரமாக தான் கையாண்டது.

முகமது ஷமி பயிற்சி

முகமது ஷமி பயிற்சி

ஆனால் இப்படி நடப்பதை தடுக்க முடியாது. நாம் அது குறித்து ஒன்றுமே செய்ய முடியாது. முகமது ஷமி இந்திய அணியுடன் நாளை தான் பயிற்சி செய்ய உள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார்.பெங்களூருவில் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியில் ஈடுபட்டார்.

ஒரு ஆண்டில் பல போட்டிகளில் விளையாடும் போது இது போன்று காயம் ஏற்படத்தான் செய்யும்.

அனுபவம் வேண்டும்

அனுபவம் வேண்டும்

இந்த உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர்கள் பலரும் நிறைய போட்டியில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். அவர்களுக்கு அனுபவம் கிடைக்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோளாக இருந்தது. அந்த வகையில் நாங்கள் வெற்றியை பெற்று இருக்கிறோம்.

Story first published: Saturday, October 15, 2022, 20:28 [IST]
Other articles published on Oct 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+