Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருநாள் தொடர்ல இருந்தும் விலகறாரு பும்ரா... சொந்த காரணம்னு சொல்லப்படுது!

டெல்லி : கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜஸ்பிரீத் பும்ரா நாளை மறுதினம் துவங்கவுள்ள 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

இதையடுத்து டி20 தொடர்களில் இருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

சொந்த காரணங்கள் காரணமாக அவர் இந்த தொடர்களில் இருந்து விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

4வது டெஸ்ட் போட்டி

4வது டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 4வது போட்டி நாளை மறுதினம் முதல் துவங்கி நடைபெறவுள்ளது. கடந்த 3 போட்டிகளில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் 4வது போட்டியில் டிரா அல்லது வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

டி20 தொடரிலும் விலகல்

டி20 தொடரிலும் விலகல்

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா தனது சொந்த காரணங்களால் அடுத்து விளையாடவுள்ள 4வது போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்து விளையாடப்பட உள்ள 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரிலும் அவர் விலகியுள்ளார்.

புதியவர்களுக்கு வாய்ப்பு

புதியவர்களுக்கு வாய்ப்பு

இந்நிலையில் வரும் 23ம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ள 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய பௌலர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருண் சக்ரவர்த்திக்கு சிக்கல்

வருண் சக்ரவர்த்திக்கு சிக்கல்

இதனிடையே காயம் காரணமாக கடந்த 3 மாதங்களாக தேசிய கிரிக்கெட் அசோசியேஷனில் பயிற்சி பெற்றுவந்த வருண் சக்ரவர்த்தி அவருக்கு எடுக்கப்பட்ட பிட்னஸ் டெஸ்ட்டில் தேறாததால் பயிற்சி போட்டிகளில் பங்கேற்பதற்காக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் டி20 தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, March 2, 2021, 11:07 [IST]
Other articles published on Mar 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+