Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அன்று ஹர்திக்.. இன்று பும்ரா.. டி20 உலகக்கோப்பையில் தவறான முடிவெடுக்கும் இந்தியா.. என்ன காரணம்??

மும்பை: ஹர்திக் பாண்ட்யாவுக்கு நடைபெற்ற அதே சோகமான சம்பவம் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Recommended Video

Jasprit Bumrah-வை அவசரப்படுத்திய BCCI? ரசிகர்கள் கோபம்

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுடனான 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

நேற்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பும்ராவின் காயம்

பும்ராவின் காயம்

இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெற்ற போதிலும் ரசிகர்களுக்கு இருந்த பெரும் குறை ஜஸ்பிரித் பும்ரா விளையாடாதது தான். காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த பும்ரா, மீண்டும் ஆஸ்திரேலிய தொடரில் தான் கம்பேக் கொடுத்தார். ஆனால் மீண்டும் ஏற்பட்ட முதுகுவலி பிரச்சினை காரணமாக தென்னாப்பிரிக்காவுடனான முதல் டி20 போட்டியில் இருந்து விலகினார்.

அவசரப்படுத்தும் பிசிசிஐ

அவசரப்படுத்தும் பிசிசிஐ

இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுடனான கடைசி போட்டியில் களமிறங்கிய பும்ரா 50 ரன்களை விட்டுக்கொடுத்தார். எந்தவொரு தாக்கமும் அவரிடம் இருந்து ஏற்படவில்லை. எனவே பிசிசிஐ தான் பும்ரா விரைந்து வரவேண்டும் என அவசரப்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் இது நல்லதல்ல.

ஹர்திக்கிற்கு வந்த நிலை

ஹர்திக்கிற்கு வந்த நிலை

கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இதே நிலைமை தான் இருந்தது. பூரண குணமடையாத அவரை, கட்டாயத்திற்காக டி20 உலகக்கோப்பை அணியில் சேர்த்தனர். ஆனால் அவர் சொதப்பினார். நீண்ட ஓய்வுக்கு பின் தான் நல்ல கம்பேக் தந்தார். தற்போது பும்ராவும் காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடையாமல் இருக்கும் சூழலில் அவரை டி20 உலகக்கோப்பைக்கு அழைத்துச்செல்வது நல்லதல்ல.

குறுகிய அவகாசம்

குறுகிய அவகாசம்

இந்திய அணி வரும் அக்டோபர் 6ம் தேதியன்று டி20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா புறப்படுகிறது. அணியில் எதாவது மாற்றங்களை செய்துக்கொள்ள வேண்டும் என்றால் அக்டோபர் 9ம் தேதிக்குள் செய்துவிட வேண்டும். எனவே அடுத்த 9 நாட்களில் பிசிசிஐ என்ன செய்யப்போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, September 29, 2022, 17:57 [IST]
Other articles published on Sep 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+