Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்ப பார்த்தாலும் ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசிக்கிட்டே இருக்காங்க... கமெண்ட் செய்த வர்ணனையாளர்

மெல்போர்ன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2வது போட்டி இந்தியாவின் அபார வெற்றியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டியில் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

இதனிடையே இந்த போட்டியின்போது இவர்கள் இருவரும் நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பதாக போட்டியின் வர்ணனையாளர் கூறியது பார்வையாளர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.

பௌலர்கள் சிறப்பான பங்களிப்பு

பௌலர்கள் சிறப்பான பங்களிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்று முடிந்துள்ள 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதையடுத்து இன்னும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

தொடர் பேச்சு

தொடர் பேச்சு

தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாக இருந்த போதிலும் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் பும்ரா, சிராஜ் இருவரும் போட்டியின்போது மைதானத்தில் நாள் முழுவதும் பேசிக் கொண்டே இருப்பதாக வர்ணனையாளர் தெரிவித்துள்ளது பார்வையாளர்களிடையே சிரிப்பை வரவழைத்தது.

சிறப்பான விளையாட்டு

சிறப்பான விளையாட்டு

ரஞ்சிக் கோப்பை மற்றும் இந்தியா ஏ அணிகளுக்காக சிராஜ் தொடர்ந்து கடினமாக உழைத்ததன் பலனை தற்போது அனுபவித்து வருகிறார். இதனிடையே, ஜஸ்பிரீத் பும்ராவின் தொடர் ஆலோசனைகள் தன்னுடைய போட்டியை சிறப்பாக தான் விளையாட காரணமாக அமைந்துள்ளதாக நேற்றைய தினம் சிராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

15 விக்கெட்டுகள்

15 விக்கெட்டுகள்

இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா. கடந்த 5 வருடங்களில் ஒரு பௌலராக, லீடராக மற்றும் தனிநபராக பும்ராவின் வளர்ச்சி அசாதாரணமாக உள்ளது. தான் சாதனைகளை செய்வது மட்டுமின்றி அணியில் சக வீரர்களை குறிப்பாக இளம் வீரர்களை அவர் ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 29, 2020, 12:56 [IST]
Other articles published on Dec 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+