Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா இருந்தால் வெற்றி.. இல்லையென்றால் தோல்வி.. இந்திய டி20 அணியின் உண்மை நிலை இதுதான்

மும்பை: இந்திய டி20 அணியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறி இருக்கிறார் ஒரு இந்திய வீரர். நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருக்கும்போதும், அவர் இல்லாதபோதும் இந்திய டி20 அணியின் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை கடந்த 2 ஆண்டுகளின் புள்ளிவிவரங்கள் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த 2025 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், பும்ரா களமிறங்கிய 26 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி 20 போட்டிகளில் அபார வெற்றி பெற்றுள்ளது. வெறும் 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது. இதில் அணியின் வெற்றி மற்றும் தோல்வி விகிதம் 5.00 ஆக மிக வலுவாக உள்ளது. அதாவது, பும்ரா விளையாடும் போது இந்தியா சந்திக்கும் ஒவ்வொரு தோல்விக்கும் எதிராக 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

Jasprit Bumrah Impact in Indian T20 Team Huge Difference in India s Win Rate with and without Him

ஆனால் அதே காலகட்டத்தில் பும்ரா காயம் காரணமாகவோ அல்லது ஓய்வு காரணமாகவோ விளையாடாத 12 போட்டிகளில், இந்திய அணி 7 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அணியின் வெற்றி விகிதம் வெறும் 1.71 ஆகக் கடுமையாகச் சரிந்துள்ளது. பும்ரா அணியில் இல்லாதபோது இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மூன்றில் ஒரு பங்காகக் குறைகிறது என்பதை இந்த எண்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

ஆரம்ப ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மற்றும் இறுதி கட்ட ஓவர்களில் துல்லியமான யார்க்கர், ஸ்லோயர் பந்துகளை வீசி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்துவது என பும்ரா ஒரு முனையில் அழுத்தம் கொடுப்பதால் தான், மறுமுனையில் அர்ஷ்தீப் சிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களால் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது.

அதாவது பும்ரா அதிக விக்கெட் வீழ்த்துகிறாரா? என்பது மட்டும் முக்கியமல்ல. அவர் இருக்கும் போது மற்ற பந்துவீச்சாளர்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதையும் சேர்த்து பார்க்க வேண்டி உள்ளது. அந்த அளவுக்கு பும்ரா ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்தும் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு விழுந்த அடி.. ஐசிசி கடும் தண்டனை.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 11 புள்ளிகள் குறைப்பு

பாகிஸ்தானுக்கு விழுந்த அடி.. ஐசிசி கடும் தண்டனை.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 11 புள்ளிகள் குறைப்பு

நெருக்கடியான தருணங்களில் கேப்டன்களின் ஒரே துருப்புச் சீட்டாகத் திகழும் பும்ராவின் உடற்தகுதி, அடுத்து வர இருக்கும் பெரிய சர்வதேச தொடர்களில் இந்திய அணியின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க மிக முக்கியமான தேவையாக உருவெடுத்துள்ளது.

Story first published: Monday, September 14, 2026, 18:37 [IST]
Other articles published on Sep 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+