Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs ஆஸி முதல் டி20 - தினேஷ் கார்த்திக் அணியில் சேர்ப்பு.. பும்ரா இடம்பெறாதது ஏன்?

மொஹாலி: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் இன்று தொடங்கியது.

Recommended Video

IND vs AUS 1st T20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் Australia அணி வெற்றி

இதில், இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்துள்ளது.

இந்திய அணியில் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

பும்ரா இல்லை

பும்ரா இல்லை

இதே போன்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, அனைத்து போட்டிகளுமே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தான். எங்கள் தவறை திருத்தி கொண்டு வருகிறோம்.

காயம்

காயம்

இன்றைய ஆட்டத்தில் ரிஷப் பண்ட் இடம்பெறவில்லை. இதே போன்று பும்ராவும் விளையாடவில்லை. பும்ரா 2வது அல்லது 3வது டி20 போட்டியிலிருந்து தான் விளையாடுவார். ஆசிய கோப்பையில் செய்த தவறை திருத்தி கொள்வோம். சில வீரர்களுக்கு காயம் இன்னும் சரியாக வில்லை.

சவாலாக இருக்கும்

சவாலாக இருக்கும்

இதனைத் தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், உலகக் கோப்பைக்காக இது ஒரு பயிற்சி களமாக பார்க்கிறோம். இரவு நேரத்தில் பனிப் பொழிவு இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்கிறோம். இந்தியாவில் விளையாடினாலே சவாலாக தான் இருக்கும்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா , 6, தினேஷ் கார்த்திக், 7, அக்சர் பட்டேல், 8, புவனேஸ்வர் குமார், 9, ஹர்சல் பட்டேல், 10, உமேஷ் யாதவ், 11, சாஹல்

Story first published: Tuesday, September 20, 2022, 19:07 [IST]
Other articles published on Sep 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+