Breaking - டி20 உலகக்கோப்பையிலிருந்து பும்ரா விலகல் என தகவல்.. இந்தியாவுக்கு பெரிய இடி.. அவ்வளவு தான்
மும்பை : 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து பும்ரா காயம் காரணமாக விலக உள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
Recommended Video
கடந்த 2 மாதமாக காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாத பும்ரா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணிக்கு திரும்பினார்.
எனினும் பும்ரா அந்த தொடரில் பழைய மாதிரி பந்துகளை வீசவில்லை. ரன்களையும் வாரி வழங்கினார்.

முதுகு வலி
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின் இந்திய அணியில் பும்ரா இடம்பெறவில்லை. பயிற்சி செய்யும் போது முதுகில் வலி ஏற்பட்டு இருப்பதாக பும்ரா மருத்துவர்களிடம் கூறி இருக்கிறார். இதனையடுத்து மருத்துவர்கள் பும்ராவின் காயத்தை ஆராய்ந்துள்ளனர்.

2 மாதம் ஓய்வு
இதில் பும்ராவுக்கு நினைத்ததை விட காயம் பெரியதாக இருப்பதால், அவரால் முழு உடல் தகுதியுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. பும்ராவுக்கு 2 மாத காலம் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனையடுத்து, பும்ரா டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பின்னடைவு
இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய அணியின் பந்துவீச்சு சமீப காலமாக மோசமாக உள்ளது. இறுதி கட்ட ஓவர்களில் இந்திய வீரர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் பும்ரா வந்த உடன் நிலைமை சரியாக என கருதப்பட்டது. பும்ரா டெத் ஓவர்களில் யாக்கரை வீசி ரன்களை கட்டுப்படுத்துவார் என விமர்சகர்களும் தெரிவித்தனர்.

ரசிகர்கள் புகார்
இந்த நிலையில், பும்ரா இல்லாதது டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் வாய்ப்பு அவ்வளவு தான் என்ற நிலைக்கு வந்துள்ளது. பும்ரா இல்லாததால், இனி முகமது ஷிமி, அணிக்குள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பும்ராவை சரியாக இந்திய அணி கையாளாமல் விட்டதே அவருக்கு காயம் ஏற்பட காரணம் என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications