Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவை உரிச்சி வச்ச மாதிரியே பாக். சிறுவன்.. ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்.. யார் அந்த பையன்?

முல்தான் : உலகத்திலேயே ஒரே மாதிரி 7 பேர் இருப்பார்கள் என்று சிலர் சொல்வார்கள். நாமும் கூட பலரை அப்படி பார்த்து இருப்போம்.

தற்போது, இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரித் பும்ராவை உரித்து வைத்த மாதிரியே ஒரு சிறுவன் பாகிஸ்தானில் உள்ளான்.

இதை கண்ட ரசிகர்கள் பலர் ஷாக் ஆனாலும், அது சிறுவன் என்பதால் பும்ராவை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆச்சரியம்

ஆச்சரியம்

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அப்போது மைதானத்தில் இருந்த ரசிகர்களில் ஒரு சிறுவன் பார்ப்பதற்குபும்ராவை போலவே இருந்தார். இதனை கண்டு கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஆச்சரியப்பட்டனர். இதனையடுத்து, அந்த சிறுவனை தொலைக்காட்சியில் அடிககடி போட்டியின் நடுவே காட்டி கொண்டு இருந்தனர்.

யார் இந்த சிறுவன்?

யார் இந்த சிறுவன்?

தற்போது அந்த சிறுவன் சமூக வலைத்தளத்தில் பிரபலமாகி வருகிறார். பலரும் யார் அந்த சிறுவன் , பும்ரா மாதிரியே இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரும் பும்ராவுக்கு தம்பி அல்லது சொந்தக்காரர் யாராவது பாகிஸ்தானில் இருக்கிறார்களா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் கிண்டல்

ரசிகர்கள் கிண்டல்

மேலும் பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும், அந்த சிறுவன் பும்ரா மாதிரி இருப்பதாக கொண்டாடி வருகின்றனர். ஒரு சிலர், பும்ரா குடும்பத்திலேயே கும்மி அடிப்பது போன்ற கமெண்டுகள போட்டு இருந்தனர். மேலும் சிலர் பும்ராவின் மனைவியிடம் இந்த புகைப்படத்தை காட்ட வேண்ட்ம் என்று பதிவிட்டு இருந்தனர்.

பும்ராக்கு என்ன ஆச்சு?

பும்ராக்கு என்ன ஆச்சு?

இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்கும் பும்ரா, காயம் காரணமாக நடந்து முடிந்த டி20 உலககோப்பை போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது முழு உடல் தகுதியை எட்டும் மயற்சியில் அவர் ஈடுபட்டு வருகறார். வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் தான் பும்ரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, December 13, 2022, 17:54 [IST]
Other articles published on Dec 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+