பும்ரா வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தா சரியா வராது.. மும்பை இந்தியன்ஸ் கோச் ஜெயவர்தனே விளக்கம்!!
மும்பை : இந்திய அணி வீரர்கள் உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ஐபிஎல் தொடரில் காயமின்றி தங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என கேப்டன் கோலி கூறி இருந்தார்.
அதே போல, இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடரில் தகுந்த ஓய்வு எடுத்துக் கொண்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

ஓய்வு அளிக்கப்படுமா
குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கும் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுமா என்பது குறித்து அவர் பங்கேற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே பேசினார்.

வீட்டில் இருக்கக் கூடாது
வீரர்களின் பணிச்சுமை நிச்சயம் பார்க்கப்பட வேண்டும், அதே சமயம் அவர்கள் நல்ல போட்டி மிகுந்த கிரிக்கெட் ஆட வேண்டும். உங்கள் சிறந்த வீரர்கள் தொடர்ந்து ஆட வேண்டும். அவர்கள் வீட்டில் இருந்து விட்டு, பின் வந்து அணியில் (உலகக்கோப்பை) ஆட முடியாது என விளக்கம் கூறினார் ஜெயவர்தனே.

பும்ரா முக்கிய வீரர்
பும்ராவை பொறுத்தவரை ரன்களை வெகுவாக கட்டுப்படுத்துவதுடன், விக்கெட் வீழ்த்தவும் தவறுவதில்லை. அதனால், நிச்சயம் அவர் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் பெரும்பாலான போட்டிகளில் ஆடுவார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பணிச்சுமை
அதே சமயம், பிசிசிஐ, ஐபிஎல் அணிகளுக்கு உலகக்கோப்பையில் ஆட உள்ள இந்திய வீரர்களின் பணிச்சுமை குறித்து அறிவுறுத்தல்கள் அளிக்கும் என்ற பேச்சும் உள்ளது. இதுவரை அப்படி எந்த அறிவுறுத்தல்களும் வரவில்லை என ஐபிஎல் அணிகள் கூறியுள்ளன.


Click it and Unblock the Notifications